ஜீர்ப்பமாக இருந்த தன் மனைவியை 7வது மாதத்திலேயே ஊருக்குப் தாய் வீட்டுக்கு கடிதம் போட்டு தங்கள் மகள் இப்போது 7 மாதமாக இருக்கிறாள். நீங்கள் வந்து முறை பிரகாரமாக அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் தன் மாமியார் வீட்டார் முறை பிரகாரம் செய்ய வேண்டிய முறைகளை செய்து தன் ஊருக்கு தன் மகளை அழைத்து சென்றார்கள். பிறகு ஒரு மாதம் கழித்து மாமனார் வீட்டிலிருந்து சத்திய தாய்க்கு ஒரு கடிதம் வந்தது.
உங்களது மருமகள் பார்க்கவி உடல் நலம் சரயில்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். தன் கணவரை பார்க்க வேண்டும் கடிதம் போட்டு என் கணவரை உடனடியாக வரச்சொல்லுங்க என்று சொல்கிறார். எனவே உடனடியாக தாங்கள் உங்கள் மகனை அழைத்து கொண்டு வரவேண்டும்.

அன்று இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த தன் மகன்களிடம் இந்த கடிதத்தை காண்பித்து மகனை என்னுடன் உடனே புறப்படு என்று எம். ஜி. ஆரிடம் சொல்லுகிறார். அவர் படித்து பார்த்துவிட்டு அம்மா நாங்கள் தினமும் இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து சூட்டிங் போய் கொண்டு இருக்கிறோம்.
உடனே நீ ஊருக்குப் போகவேண்டும் புறப்படு என்றால் எப்படி தொடர்ந்து ஒரே படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு போக வேண்டும். இந்த படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிந்து விடும் பிறகு நான் வருகிறேன் என்று உடனே சொல்லி அண்ணே உடனே அம்மாவை ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு வாங்க என்ற சொன்ன உடனே சத்தியதாய் ஏதும் மறுப்பு சொல்ல முடியாமல் புறப்பட்டு விட்டார். கடிதத்தை படித்த எம். ஜி. ஆருக்கு இது ஒரு பெரிய வேதனையாக இருந்தது.
இருந்தாலும் வாழ்க்கையில் தான் எடுத்த இலட்சியத்தை மனதில் மிகவும் உறுதியுடன் வைத்து கொண்டார். இங்கு இருந்து பாலக்காடு சென்ற தன் தாய் பாலக்காட்டிலிருந்து 20 மைல் உள்ள மருதூர் என்ற ஒரு சிறிய ஊர் அங்கு செல்ல வேண்டும். இங்கிருந்து இரவு 9 மணிக்கு ரயிலில் புறப்படடவர். அடுத்த நாள் மதியம் சம்பந்தி வீட்டிற்கு போய்சேருகிறார். அந்த நேரம் தன் மருமகளுக்கு இன்னும் மிக மோசமான நிலையில் வைத்தியர்கள் வைத்தியம் செய்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சத்தியதாயை கண்டவுடன் உங்கள் மகன் வரவில்லையா என்ற ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். உடனே சத்தியதாய் மகன் நாளைக்கு புறப்படுவார் என்று சொல்லிவிட்டு தன் மருமகளை பார்த்து என்ன செய்கிறது உனக்கு என்று ஆவலோடு மருமகள் கன்னத்தை தொட்டு பார்த்து கேட்கிறார். உடனே மருமகள் அறையும் குறையுமாக அந்த பக்கம் இந்த பக்கம் பார்த்து விடடு ஏக்கத்துடன் தன் கணவர் வரவில்லையா என்று மாமியாரை மீண்டும் பார்த்து கேட்கிறார்.
உடனே அவர் நாளைக்கு வருவான் என்று ஆறுதல் சொல்கிறர். அதை கேடடவுடன் மருமகள் தங்கமணியின் முகத்தில் ஆறுதல் இல்லை. பார்கவி என்ற தன் மருமகளுக்கு தங்கமணி என்ற பெயர் எப்படி வந்தது. சத்திய தாய்க்கு பிறந்த குழந்தைகளில் மூத்த மகளின் பெயர் தங்கமணி, அந்த குழந்தை மிகவும் அழகாக இருப்பார். அந்த இளைய மருமகளின் ஜாடை இருந்ததால் தன் மகளின் ஞாபகமாக தங்கமணி என்று வீட்டில் எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.
இப்போ தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வேதனை ஏற்பட்டது. மூன்று நாட்களாக காய்ச்சலில் படுத்து இருந்த தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வலி வந்தது. உடனே வைத்தியரை அழைத்து பார்க்கும்போது சற்று நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லி வைத்தியத்தை பார்க்கிறார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த சத்திய தாய்க்கு மிகவும் கவலை அதிகமாகிவிட்டது.
இருந்தாலும் சத்தியதாயின் மன தைரியத்தை விடாமல் நடப்பது நடக்கட்டும் என்று எல்லாம் அந்த மகாகாளி கிருபை என்று நினைத்து கொண்டு 5 பிள்ளைகளை பெற்ற இந்த தாய் தன் மருமகளுடைய பிரசவ வேதனையால் துடித்து கொண்டு இருக்கும் தன் இளைய மருமகளின் நிலைமை என்ன ஆகும் என்பதை கூர்மையாக கவனிக்கிறார்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வைத்திய ருடைய விடா முயற்சியால், குழந்தையை பிறக்க செய்கிறார்கள். ஆனால் குழந்தை உயிருடன் இல்லை. எப்படியோ குழந்தை வயிற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்தது போதும் என்ற நிலை இருந்தது.
எல்லோரும் குழந்தை ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டார்கள். அடுத்து தங்கமணியுடைய நிலை எப்படி இருக்கிறது என்று கவனிக்கும் போது முன்பு இருந்ததை விட மிக மோசமாக இருப்பதை வைத்தியர்கள் அறிந்தார்கள். தங்கமணிக்கு மூளை காய்ச்சல் அதிகமாகிவிடடது. வைத்தியர்களும் தங்கமணி உடைய தாய், தந்தையர்களும், சம்பந்தி அவர்களும் பக்கத்தில் உள்ள கொல்லம் கோடு என்ற ஊரில் மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனைக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தார்கள். இது சத்திய தாயின் தூண்டுதலின் பெயரில் நடந்தது. அப்படி இருந்தும் தங்கமணி நாடி துடிப்பு மிக மோசமாக இருப்பதை வைத்தியர் அறிந்தார். இதற்கிடையில் தங்கமணியை அந்த காலத்தில் கார். டாக்சி இந்த ஊரில் இல்லை.
ஆஸ்பத்திரிக்கு மாட்டு வண்டியின் மூலமாக கொண்டு போக ஏற்பாடுகளும் ஆக்விட்டது. வைத்தியர் சத்தியதாயை தனியாக அழைத்து இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் என்று சொல்கிறார். இதற்கிடையில் தன் மகன்களுக்கு இந்த செய்தியை எப்படியாவது மிக மோசமாக இருக்கிறாள். உடனடியாக புறப்பட்டு வா என தந்தி மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்று வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாக செய்தார்.
தந்தி கொடுக்க வேண்டும் என்றால் பாலகாட்டிற்குத் தான் செல்ல வேண்டும். சென்னைக்கு தந்தி கொடுக்க சென்றவர் திரும்பி வருவதற்குள் எம். ஜி. ஆருடைய மனைவி பார்கவி என்ற தங்கமணி இறந்துவிட்டார். அடுத்த நாள் சென்னையில் தந்தியை பார்த்த எம். ஜி. ஆர். எம். ஜி. சியுடன் உடனே புறப்படுகிறார்கள். புறப்பட்டு தங்கமணியுடைய ஊருக்கு வருகிறார்கள். மூன்றாவது நாள் தன் மனைவி தங்கமணி வீட்டிற்கு அண்ணனும் தம்பியும் வருகிறார்கள். தங்கமணி இறந்து போன இரண்டாவது நாள் வருகிறார்கள், தங்கமணி வீடு மிக அமைதியாக இருக்கிறது.
எம். ஜி. ஆரும், எம். ஜி. சியும் பார்த்தவுடன் அங்கு இருந்த அனைவரும் தன் தாயும் சேர்ந்து தன் மகன் எம். ஜி. ஆரை கட்டி பிடித்து ஓ... என்று கதறி அழுகிறாள். இதை அறிந்த எம். ஜி. ஆரும் என் தங்ககுட்டிக்கு என்னவாயிற்று எங்கே என் தங்ககுட்டி என்று உடனே வீட்டிற்குள் செல்கிறார். தங்ககுட்டி இறந்து விட்டாள்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவளை கொன்றுவிட்டீர்கள். ஓ என்று கத்துகிறார். இதை பார்த்த அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் வீட்டிற்கு வந்து ஆறுதல் சொன்னார்கள். தங்கமணி எப்படி இறந்தார் என்ற விளக்கத்தையும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டு அறிந்த எம். ஜி. ஆர். மெளனம் அடைந்து வாய் திறந்து பேச முடியாத அளவிற்கு துக்கம் கொண்ட எம். ஜி. ஆர். யாரிடமும் பேசாமல் மெளனமாக அமர்ந்து விடுகிறார்.
சிறிது நேரம் கழித்து தன் மகன் கண்ணீரும, கவலையுமாக அமர்ந்து இருப்பதை பார்த்து தன் மகனிடம் வந்து மகனே, நீ அழாதே என்று ஆறுதல் சொல்கிறார். இதை கேட்ட மகன் தாயை பார்த்து எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். அதை கேட்காமல் உன் இஷ்டத்திற்கு எனக்கு கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து ஒரு வருடத்தில் அந்த அன்பு மனைவியை இழந்து என்னை இப்படி ஒரு விதவையாக்கிவிட்டாயே என்று தாயிடம் உங்களுடைய சமாதானம் தேவையில்லை என்று சொல்கிறார்.
இந்த வார்த்தைகளை கேட்ட தாய் வாய் அடைத்து போய்விட்டார். இதை பார்த்த எம். ஜி. சி. இப்போது தாயிடம் எதுவும் பேச கூடாது என்று மெளனமாக இருந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் எம். ஜி. ஆர். தன் அண்ணனை அழைத்து அண்ணே அம்மாவிட்ட செலவுக்கு பணத்தை கொடுத்து எல்லா விஷயத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வர சொல்லங்கள் நாம இப்போ புறப்படுவோம்.
தன் மகளை பறிகொடுத்த மாமனாரும மாமியாரும் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எம். ஜி. ஆரை பார்த்து என்னய்யா வந்தவுடன் புறப்படுகிaங்க உடனே எம். ஜி. ஆர். நான் என் தங்ககுட்டியை கல்யாணம் செய்து கொள்ளும் போது இந்த ஊருக்கு வந்தவன் அதற்கு பிறகு எனது தங்ககுட்டியை இறந்து போன பிறகு வந்து இந்த வீட்டில் இருக்க எனக்கு மனம் இல்லை என்று சொல்லிவிட்டு வாங்க அண்ணே போகலாம் என்று புறப்படுகிறார்கள்.
சென்னைக்கு வந்த சேரும் வரை எம். ஜி. ஆர். ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை. அடுத்த நாள் சென்னைக்கு வந்த பிறகு வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே படுத்துவிட்டார்.
இதற்கிடையில் எம். ஜி. சியுடைய மனைவி தன் கணவருடன் தங்கமணியின் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டு அறிகிறார்கள். எம். ஜி. சி. தன் தம்பி உடைய வாழ்க்கை நிலையை நினைத்து வேதனை பட்டாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற யோசனையில் தானும் வீட்டுக்குள் இருக்காமல் தம்பிக்கு அடுத்து எந்த கம்பெனியில் என்ன சூட்டிங் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தம்பியின் நிலைமைகளை சொல்கிறார்.
No comments:
Post a Comment