Thursday, May 15, 2014

40.50களின் கனவுக் கன்னி

தமிழ் திரையுலகில் 1940 மற்றும் 50 களில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் டி.ஆர்.ராஜகுமாரி. அப்போதைய இளைஞர்களுக்கு இவர்தான் கனவுகன்னி. சுண்டி இழுக்கும் பார்வை யாலும் போதை ஏற்றும் குரலாலும் தமிழக வாலிய பட்டாளங்களையெல்லாம் கட்டி போட்டு இருந்தார்.

திரையுலகின் முதல் கவர்ச்சி நடிகையும் இவர்தான். 1939ல் குமாரகுலோத்துன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தியாகராஜ பாகவதரின் மெகாஹிட் படங்களான சிவகவி, ஹரிதாஸ் போன்றவற்றில் நடித்தார். சிவாஜியின் மனோகரா படத்தில் வில்லியாக தோன்றினார்.
மனோகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் இவரது குரூர வசனம் பலத்த வரவேற்பை பெற்றது. குலேபகாவலி படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார். இதில் ஆசையும் நேசமும் ரத்த பாசத்தினால் ஏற்படுவதை பாராயடா என்று பாடி நடித்து கிறங்கடித்தார்.
தமிழில் அதிக செலவில் தயாரான முதல் பிரமாண்ட படமான சந்திர லேகாவில் கதாநாயகி யாக நடித்தார். சிவாஜியின் தங்கமலை ரகசியம், தங்க பதுமை, அன்பு, எம்.ஜி.ஆருடன் பாசம், புதுமைப்பித்தன், பி.யு.சின்னப்பாவுடன் வனசுந்தரி, கிருஷ்ணபக்தி விகடகவி என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
1963ல் கடைசியாக இரண்டு படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர் கர்நாடக சங்கீத பாடகி.
நல்ல டான்சரும் கூட சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ராஜகுமாரி என்ற தியேட்டரை கட்டினார். ராஜகுமாரியின் சொந்த ஊர் தஞ்சாவூர். பழம்பெரும் டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவின் தங்கை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் 1977 இல் தனது 77 ஆவது வயதில் மரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment