i ‘அரவுண்டு தி வேர்ல்டு’ என்னும் படம் இந்தியாவின் முதல் 70 எம். எம். படமாகும். ஆண்டு 1967.
i அகன்ற திரையில் திரைப்படம் காண்பிக்கும் முறை 1928 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹென்றி செர்ட்டின்’ என்பவரால் முயற்சிசெய்து பார்க்கப்பட்டது. அப்போது அதற்குப் பெயர் ‘அனமோர்போஸ்கோப்’ என்பது. 1953 ஆம் ஆண்டு ஓர் அமெரிக்க சினிமா கம்பெனி தான் இதன் இயற்பெயரை மாற்றி ‘சினிமாஸ்கோப்’ என்ற பெயரை சூட்டியது.
i இந்தியாவின் முதல் ஏர்கண்டிஷன் திரையங்கம் தெற்கு பம்பாயில் இருக்கிறது 1935 ல் கட்டப்பட்ட ‘ரீகல் தியேட்டர்’ தான் இதன் சிறப்பைப் பெறுகிறது. அத்துடன் முதன் முதலில் சினிமாஸ்கோப் திரையிடப்பட்டதும் இங்குதான்.
i முப்பது அல்லது நாற்பது நிமிட ஓட்டங்கொண்ட கதை சொல்லும் துண்டுப் படங்களை 1905 ல் ஜே. எஃப். மதன் என்பவர் தயாரித்தார். அவரது ‘எல்ஃபின்ஸ்டோன் பயாஸ்கோப் கம்பெனி’ (கல்கத்தா) இந்தப் படங்களை வெளியிட்டது.
i முதல் நீளமான கதைப் படத்தைத் தயாரித்தவர் ‘ஆர். ஜி. டோர்னே’, ‘புண்டலிக்’ என்ற இந்தப் படம் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மகான் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லுவதாகும். மே 18, 1912 ல் இது வெளியிடப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க இந்தியரால் தயாரிக்கப்பட்ட முதல் கதைப் படம் தாதா சாகிப் பால்கேயின் ராஜா ஹரிச்சந்திரா. இது மே 3 1913 ல் வெளியிடப்பட்டது.
i ஹாலிவுட் பேரழகி ‘மர்லின் மன்றோ’வின் திருமண ஒப்பந்தப் பத்திரம் அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 2.5 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதாம். 1956 ல் அமெரிக்க நாடகாசிரியர் ‘ஆர்தர் மில்லரை’ மன்றோ தனது மூன்றாவது கணவராக மணம் செய்தபோது அந்த மண ஒப்பந்தம் கையெழுத்தானதாம். மில்லருக்காக யூதராக மதம் மாறி மணம் புரிந்த மன்றோ, 1961 ல் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
i ஒரு பாடல் கூட இல்லாது வெளிவந்த முதல் திரைப்படம் ‘நெளஜவான்’. 24 மணி நேரத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட துப்பறியும் திரைப்படமான ‘நெளஜவான்’ - ல் பாடல்களைச் சேர்க்காமல் தயாரிப்பாளர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு இரு பாடல் காட்சிகளைப் பிறகு இணைத்தார்களாம்.
i ‘மேன் வித் தி அயர்ன்மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘உத்தம புத்திரன்’. நடிகர் பி. யு. சின்னப்பா நடித்தது. வெளியான ஆண்டு 1940. இதில் சின்னப்பா இரட்டை வேடம் ஏற்று நடித்து புகழ்பெற்றார். தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். இதே கதை, வீனஸ் பிக்சர்சால் தயாரிக்கப்பட்டு சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
i முதல் மலையாளப் படத்தை எடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் 1961 ல் ‘கண்டம் வெச்ச கோட்டு’ என்ற பெயரில் முதல் மலையாள வண்ணப் படத்தையும் எடுத்தது.
i 1920 - 1930 களில் உலகிலேயே மிகவும் பிரபலமான நபராக இருந்தவர் நகைச்சுவை நடிகர் ‘சார்லி சாப்ளின்’ தானாம். ஒரு முறை அவர் தன் சொந்த ஊரான லண்டனுக்குச் சென்றிருந்த போது இரண்டே நாட்களில் சார்லி சாப்ளினுக்கு 73,000 ரசிகர் கடிதங்கள் வந்தனவாம்.
i சார்லி சாப்ளின் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று சுவிட்சர்லாந்தில் அவரது இல்லத்திற்கு அருகிலேயே கார்சியர்கார்வேலி என்னும் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது ஊர்க்காரர்களுக்கு ஒரு அதிர்ச்சி. காரணம் சார்லியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.
i கொள்கைக்காரர்கள் 6,00,000 டாலர்கள் கேட்டு சார்லி குடும்பத்திற்கு எழுதினார்கள். அவரது மனைவி மறுத்துவிட்டார். கடைசியில் போலந்து, பல்கேரிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு அகதிகளை பொலிஸ் கைது செய்தது. சாப்ளின் மீண்டும் 1978 ஆம் ஆண்டு மே 23 அன்று அதே இடத்தில் கான்கிரீட்டால் அடக்கமானார்.
No comments:
Post a Comment