Wednesday, June 6, 2012


 


  

தமிழ்த் திரையுலகில் முதன் முதல் ரூ. ஒரு இலட்சம் சம்பளம் வாங்கிய நடிகை

10 வயதில் ரயிலில் பாடி சம்பாதித்த சுந்தராம்பாள்

nஹீன்னக மேடைக் கலைஞர், இந்திய நாடகராணி, இசைவாணி, சுதந்திர போராட்ட முதல் கலையுலகப் பிரஜை, தமிழ்த் திரை உலகில் முதன் முதல் ஒரு இலட்சம் ரூபா சம்பளம் வாங்கிய நடிகை இப்படிப் பல சிறப்புகளையும் ஒருங்கே பெற்றவர் திருமதி சுந்தராம்பாள்.
கொடுமுடி சுந்தரம் என்றழைக்கப்பட்ட இவர் 1908 இல் பிறந்தார். சிறு வயதிலேயே நல்ல குரல் வளம் கொண்டிருந்ததால் அனைவரும் இவரைப் பாடச் சொல்லிக் கேட்பது வழக்கம். பத்து வயதில் ஏழ்மை காரணமாக ரயிலில் பாடி சம்பாதித்தார். ஊர்மக்கள் கோவிலிலும் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு.
நடேச ஐயர் என்ற நாடக நடிகர், தயாரிப்பாளர், பின்னர் முனிசிபல் சேர்மன் என்பவரும், பொலிஸில் சேவை பார்த்த கிருஷ்ணசாமி என்பவரும் சுந்தரத்திற்கு மிகவும் உதவ, சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு வேலு நாயர் கும்பகோணம் அழைத்துச் சென்று தன் நாடகக் கம்பெனியில் நடிக்க வைத்தார். சிறுமி தன் பாட்டாலும், நடிப்பாலும் எல்லோரையும் கவர்ந்தாள்.
1927 இல் தன்னுடன் நடித்த எஸ்.ஜி. கிட்டப்பாவை மணந்து கொண்டார்.
இவர் நடித்த ‘வள்ளி திருமணம்’, ‘பவளக்கொடி’, ‘ஹரிச்சந்திரா’ பெரும் வெற்றியைத் தந்தன. 1931 ஆம் ஆண்டு தமிழின் முதல் பேசும் படமான ‘மஹா கவி காளிதாஸ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இருவரும் காங்கிரஸ் அபிமானிகள் என்பதால், நாடக மேடையில் காதி உடுத்தி சுதந்திர எழுச்சிப் பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்பு ஊட்டினர்.
துரதிர்ஷ்டவசமாக கிட்டப்பா 1933 இல் மரணமடைந்தார். நடிப்பதை விட்டு விட்டு சோகத்தில் இருந்தவரை, காந்தி அடிகள் நேரில் சென்று தேசப்பாடல்கள் பாட அழைத்தார். அதனால் மீண்டும் நடிக்க வந்த அவர் செய்த சாதனைகள் அதிகம்.
அவர் நடித்த திருவிளையாடல், ஒளவையார், நந்தனார், மணிமேகலை, காரைக்கால் அம்மையார், கந்தன் கருணை, வீர சுந்தரி, பூம்புகார், சக்தி லீலை, திருமலை தெய்வம், உயிர்மேல் ஆணை, துணைவன் படங்கள் அவர் பாடிய பாடல்களால் ஓடியது என்றால் அது மிகையல்ல. பல பாடல்களின் இனிமை எல்லோரையும் பாட வைத்தது.
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், காமராஜரும் அரசியலுக்கு அழைக்க 1951 ஆம் ஆண்டு சென்னை சட்ட மன்ற மேல் சபை உறுப்பினரானார்.
பாட்டுக்காக இரு முறை தேசிய விருது பெற்றுள்ளார். 1964 இல் இசைச் சங்கம் “தமிழிசை பேரறிஞர்” என கெளரவித்தது. ‘70 இல் இந்திய அரசு கலைத் துறையில் ‘பத்ம ஸ்ரீ’ பட்டம் அளித்தது.
இன்று வரை இவர் பாடிய “பழம் நீ அப்பா”, “வாழ்க்கை என்னும் ஓடம்”, சிறைச்சாலை என்ன செய்யும்” போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர வைக்கின்றன.

 

பஜனை பாடி கிடைக்கும் 5 ரூபாயில் ஓடியதுதான் டி.எம்.எஸ்ஸின் ஜPவனம்

இவர் இரு படங்களில் கதாநாயகனாக நடித்தவர்

டி. எம். எஸ்..... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட ஏழிசை வேந்தன். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!
டி. எம். எஸ். என்பதில் உள்ள ‘எஸ்’ என்றால் செளந்தரராஜன், ‘எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார் ‘டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் ‘தொகுளுவா’. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!
டி. எம். எஸ் ஸ¤க்கு டி. எம். எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே. பி. சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார்.
தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி. எம். எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.
டி. எம். எஸ்ஸின் முதல் பாடல் ‘ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்.

டி. எம். செளந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேசங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது!
டி. எம். எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...’, ‘உள்ளம் உருகுதய்யா முருகா’, ‘சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!
டி. எம். எஸ். இசையமைத்துப் பாடிய ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பந்தியிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம்பெறும். அந்தந்தப் பந்தியை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!
‘அடிமைப் பெண்’ படத்தின் போதுதான் டி. எம். எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். ‘பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம். ஜி. ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி. எம். எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ். பி. பாலசுப்பிரமணியமுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். ‘ஆயிரம் நிலவே வா’
பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். ‘இல்லாட்டி ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! பாவம் டி. எம். எஸ்ஸ¤க்கு என்ன கஷ்டமோன்னு உச்சுக் கொட்டுவான். அதனால், இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்!
கவிஞர் வாலியைத் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி. எம். எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல் ‘இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி. எம். எஸ். போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!
‘நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில் டி. எம். எஸ்ஸ¤ம் பி. சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!
தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி. எம். எஸ்ஸ¤க்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும் போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி. எம். எஸ்.
‘வசந்தமாளிகை’ படத்தில் வரும் ‘யாருக்காக’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். ‘அதெல்லாம் வீண் வேலை’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட ‘எக்கோ எஃபெக்ட்’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது, ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்.
வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் ‘யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு’ கனத்த குரலுடைய டி. எம். எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி. எம். எஸ்.!
காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி. எம். எஸ். இவரது வீட்டுக்கு பகவான் சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி. எம். எஸ்ஸை ‘கற்பகவல்லி’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்! கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி. எம். எஸ். கண்ணதாசன் எழுதிய ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்’ என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் ‘சாக வேண்டும்’ என்பதை ‘வாடவேண்டும்’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!
நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி. எம். எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக, இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!
எம். ஜி. ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!
‘பாகப் பிரிவினை’ படத்தில் 100 வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி. எம். எஸ். விழாவில் ‘கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
‘நவராத்திரி’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாசமான வேடங்களுக்கும் ஏற்ப தன் குரலை வித்யாசப்படுத்திப் பாடியிருப்பார் டி. எம். எஸ்.
‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்’
மத்திய அமைச்சர் மு. க. அழகிரி, டி. எம். எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும் போதெல்லாம், டி. எம். எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!
தமிழில் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.) சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி. எம். எஸ்ஸ¤க்கு எதுவும் இல்லை.







அக்காவாக நடிக்க அசின் மறுப்பு


நடிகை அசின் பொலிவுட்டில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு நடித்து வருகிறார். ஷங்கரின் புதிய படத்தில் அவர் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
இந்நிலையில் லிங்குசாமி, மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பாலை வைத்து எடுத்த வேட்டையை இந்திக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளார். நம்ம ஊர்ல இருந்து அங்க போன பொண்ணாச்சே என்று நினைத்து சமீரா ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க அசினை அணுகியுள்ளார். அதற்கு அசின் ஆளை விடுங்க என் நைசாக நழுவி விட்டார்.
இதற்கு அசின் கொடுத்துள்ள விளக்கம். பல கதாநாயகிகள் உள்ள படத்தில் நடிக்க நான் ரெடியாக இல்லை. அதிலும் அக்கா ரோலுக்கு நான் ஆளில்லை. மேலும் எனக்கு கால்iட் பிரச்சினையும் உள்ளது என்று கூறியுள்ளார்.

சமந்தாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு


சமந்தாவிற்கு இந்த வருடம் சூப்பராக தான் அமைந்துள்ளது போல, கெளதம் மேனன், மணிரத்தினம் போன்ற மெகா இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதனையடுத்து, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.
இது சமந்தாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. தமிழ்ச் சினிமாவில் ஒரு வலம் வருவதற்கு முன்பே இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘தேர்தல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி. சி. ஸ்ரீராமும், இசையமைப்பாளராக ஏ. ஆர். ரகுமானும் பணியாற்றுகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமானின் சம்பளம் 1 1/2 கோடி ரூபா


தமிழில் ‘ரோஜா’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், தெலுங்கு, மட்டுமல்லாத இந்திப் படங்களிலும் புகழ் பெற்றார். பின்னர் ஹொலிவுட் படங்களுக்கும் இசை அமைத்தார்.
ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கிலப் படத்துக்காக ஏ. ஆர். ரகுமான் ஒஸ்கார் விருதுகள் பெற்றார். ஏ. ஆர். ரகுமானுக்கு உலகம் முழுவதும் இளம் ரசிகர்கள் இருப்பதால் அவரது இசைக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்துக்கும் சிரத்தை எடுத்துக் கொண்டு இசை அமைக்கிறார். இதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்.
இதனால் ஏ. ஆர். ரகுமானின் சம்பளம் படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது ரகுமான் ‘சேன்டல் உட்’ என்ற கன்னட படத்துக்கு இசை அமைத்து வருகிறார். இது தமிழில் அஜீத் நடித்த ‘வரலாறு’ படத்தின் கன்னட ரீமேக் ஆகும்.
அஜீத் கேரக்டரில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ரகுமான் இசை அமைக்க

ரூபா 1 1/2 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இது எந்த இசை அமைப்பாளரும் வாங்காத சம்பளம் என்றும் பேசப்படுகிறது.
ஏ. ஆர். ரகுமானுக்கு இது 2வது கன்னடப் படம் ஆகும். இதற்கு முன் ‘சஜினி’ படத்துக்கு இசை அமைத்துள்ளார். இதில் தமிழில் வெளியான ‘ஜோடி’ பட பாடலை கன்னடத்தில் பயன்படுத்தி இருந்தார்.

 

ஹன்சிகாவின் அதிர்ஷ்ட எண்



தமிழ், இந்தியில் முன்னணி நடிகையான ஹன்சிகா தற்போது சேட்டை, வாலு, சிங்கம் – 2, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார். பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்வதால் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். சமீபத்தில் வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது :-
நான் சொகுசு கார் வாங்கியுள்ளேன். 20வது வயதில் பி. எம். டபுள்யூ வெளிநாட்டு சொகுசு காருக்கு உரிமையாளராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தாய் மற்றும் சகோதரனை காரில் உட்கார வைத்து ஓட்டிச் சென்றேன், இது சந்தோஷமான அனுபவமாக இருந்தது. எனது அதிர்ஷ்ட எண் 9. அந்த நம்பரே காருக்கும் கிடைத்து உள்ளது. இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

 

 

சிரஞ்சீவி மகன் திருமணத்தில் ஸ்ரேயா, தமன்னா நடனம்


பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண். இவர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தெலுங்கில் ராம்சரண் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘மகதீரா’ படம் தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரில் ரிலீசானது.
ராம்சரனுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகள் பெயர் உபாசனா காமினேனி. இவர் அப்பலோ ஆஸ்பத்திரியின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி ஆவார்.
ராம்சரண் உபாசனா திருமணம் வருகிற 14ந் திகதி ஐதராபாத்தில் நடக்கிறது. திருமண சடங்குகள் இரு தினங்களுக்கு முன்னதாகவே வருகிற 11ந் திகதி துவங்குகிறது. அன்றைய தினம் மணமகளுக்கு மருதாணி சடங்கு நடக்கிறது. இதில் நடிகைகள் ஸ்ரேயா, தமன்னா இருவரும் நடனம் ஆட ஒப்புக் கொண்டு உள்ளனர். பல்வேறு தெலுங்கு பாடல்களுக்கு ஆடுகிறார்கள்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் அவர்களுடன் நடனம் ஆடுகிறார். 12ம் திகதி இரு வீட்டாரும் முத்தயாலம்மா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். நடிகர் நடிகைகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் ராம்சரண் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

No comments:

Post a Comment