Sunday, December 1, 2024

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் சர்வதேச இளைஞர் திரைப்பட விழா

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சினிமா கனவுகளுடன் அத்துறைக்குள் பிரவேசித்திருக்கும் இளம் சினிமா கலைஞர்களுக்கு களமமைத்து கொடுக்கும் நோக்கில் இளைஞர்களின் சினிமா அறுவடையாக (Youth cinematic Harvest) சர்வதேச இளைஞர் திரைப்பட விழாவை நடாத்தி வருகின்றது. 10 வருடங்களுக்கு முன்னர் உள் நாட்டு திரைப்படக் கலைஞர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா தற்போது சர்வதேச நாடுகள் பலவற்றின் தயாரிப்புகளுடன் எம்மவர்களும் இணைந்து போட்டியிடும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. இம்முறை ரஷ்ய கலாசார மத்திய நிலையத்தில் 10வது சர்வதேச இளைஞர் திரைப்பட விழாவை நடாத்தியிருந்து. இப்போட்டிக்காக சுமார் 150 உள் நாட்டு தயாரிப்புக்களும் 50 சர்வதேச தயாரிப்புக்களும் விண்ணப்பித்து தகுதி பெற்றிருந்தன. இவற்றில் 20 குறுந்திரைப்படங்களும் 20ஆவணப்படங்களும் 21இலிருந்து 23ம் திகதிவரை மக்கள் பார்வைக்காக திரையிடப்பட்டதுடன் 24ஆம் திகதி விருது வழங்கும் விழாவை நடாத்தியிருந்தது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயம் சட்டத்தரணி சிந்தக ஹேவாபத்திரனவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே கலந்துக்கொண்டார். விருதுக்காக தெரிவு செய்யும் நடுவர்குழு சர்வதேச -திரைப்பட வல்லுனர்கள் பலரை கொண்டதாக காணப்பட்டதுடன் ஜுரியின் விசேட அதிதியாக சர்வதேச திரைப்பட இயக்குனர் இந்தியாவின் ஸ்ரீ சாஜி நாராயண் கருன் கலந்து கொண்டார் அத்துடன் இவ்விழாவின்போது அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு, சர்வதேச மட்டம் என இரு பிரிவுகளாக இத்திரைப்படங்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் சர்வதேச மட்டத்தில் சிறந்த குறுந்திரைப்படமாக எகிப்து நாட்டின் மொராடா மொஸ்தபாவின் I PROMISE YOU PARADISE திரைப்படம் விருதுக்கு தெரிவாகியது. சிறந்த இயக்குனருக்கான விருது இலங்கையின் Let me go திரைப்படத்தை இயக்கிய சலன் பெரேரா பெற்றுக்கொண்டார். சர்வதேச மட்டத்தில் சிறந்த ஆவணப்படமாக இந்தியாவின் கௌரவ் பூரியினால் தயாரிக்கப்பட்ட A Bridged படம் தெரிவு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு A Remembering of disremembering ஆவணப்படத்தை இயக்கிய பிலிப்பைன்ஸ் நாட்டின் கிரிஸ் பிரிங்காஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

உள்நாட்டுப் போட்டிப்பிரிவில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான விருதுகளில் முதலாம் இடத்தை சந்தீப் மிதுனின் 'அரகல' குறுந்திரைப்படம் பெற்றுக்கொண்டதுடன் 2ஆம் இடத்தை கௌதமனின் ‘The Portraits’ உம் 3ஆம் இடத்தை கெனிஸ்டன் ஜோனின் 'நடுநிசி மாயம்' ஆகிய குறுந்திரைப்படங்களும் பெற்றுக்கொண்டன.

உள்நாட்டுப் போட்டிப்பிரிவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதுகளுக்கு முதலாம் இடத்தினை மஹெசுரு பெரேராவின் ‘Cinephile’, 2ம் இடத்தை தரிந்து லொக்கு ஆரச்சியின் ‘The Portraits’ 3ம் இடத்தை பெதும் சந்தீப்பவின் ‘Entry prohibited’ஆகிய ஆவணத் திரைப்படங்கள் தெரிவாகின. வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருதினை ‘The Portraits’ 'குறும் திரைப்படத்தின் அப்துல்லா ரியாஸ் பெற்றுக் கொண்டார்.

நாட்டின் ஏனைய துறைகளைப் போலவே கலைத்துறையிலும் மிளிர துடிக்கும் இளைஞர்களின் ஆரம்பத்திற்கு உறுதியான அடித்தாளமிட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் எப்பொழுதும் துணை நிற்பதற்கு இவையும் சான்று பகிர்கின்றன..

 

அரச நாடக விழாவில் "பறையனின் கடைசி அடி"



கலாசாரத் திணைக்களம் வருடாந்தம் நடத்தி வரும் அரச நாடக விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்று "பறையனின் கடைசி அடி". இந்த நாடகத்தை கந்தலோய தோட்டம் நாவலப்பிட்டியில் வசிக்கும் மோசஸ் சுரேஷ் தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார்.

நாம் பார்க்கும் சமகால உலகில் வாழ்ந்து வரும் கடைசி பறையன் அவனுடைய மனநிலையை வெளிப்படுத்தத் தெரியாமல் ஒரு சூழ்நிலை கைதியாக மாறுகிறான். ஒரு பக்கம் தன்னுடைய கலை, மறுபக்கம் இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பு. இரண்டுக்கும் இடையில் இவன் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பமானது இவனுடைய மனநிலையை மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. பறையனின் கடைசி பறை அடியானது அடுத்த சந்ததியினருக்கு நல்ல கருத்துக்களை வழங்கும் முகமாக இந்த நாடகம் படைக்கப்பட்டுள்ளது.

ஆர் தனுஷன், சத்தியசீலன், கலைச்செல்வன், அல்ட்ரிக், ரஞ்சிதன் (மேடை அமைப்பு) சஞ்ஜிவனி, அனுஷ், ரிஸ்கா (நாடகக் கலைஞர்கள்) ராஜேஸ்வரி, நிரஞ்சன், பஜித்ரா ஆகியோர் இந்த நாடகத்திற்கு தங்களால் இயன்ற வகையில் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இந்த நாடகம் கூத்துக்கலையாக அமைந்துள்ளது. மலையகத்தில் உள்ள ஒரு பிரச்சினையை மையப்படுத்திய இந்த நாடகம் அரச நாடக விழாவில் மூன்றாம் சுற்றுக்கு தெரிவாகி கடந்த 2024.11.22 திகதி மேடையற்றப்பட்டது.

அறநெறி அறிவு நொடி

 



20380 ) மகா கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? தடையின்றி செயல்கள் நடைபெறும், லெட்சுமி கடாச்சம் ஏற்படும்.

20381 ) சந்தான கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

20382 ) வித்யா கணபதி ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?கல்விக்காக

20383 ) மோகன கணபதி ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது? திருமணத்திற்காக

20384) ஸ்வர்ண கணபதி ஹோமம் எதற்காக செய்யப்படுகிறது?வியாபார லாபத்திற்காக

20385) நவகிரக ஹோமம்எதற்காக செய்யப்படுகிறது?நவகிரகங்களினால் நன்மை ஏற்பட

20386) லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?

ஏழையும் செல்வந்தனாவான்

20387) துர்க்கா ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? எதிரிகளின் தொல்லை அகலும்

20388) சுதர்சன ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவந்கள் அகலும்

20389) ஆயுஷ் ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

20390) மிருத்துந்தய ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

20391) தன்வந்திரி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? நோய் நிவாரணம்

20392) ஸ்வயம்வரா ஹோமம் ஏன் செய்யப்படுகிறது? திருமணதடை அகல, விரைவில் கைகூட

20393) சந்தான கோபால கிருஷ்ணஹோமம் ஏன் செய்யப்படுகிறது?குழைந்தை பேறு கிடைக்க

20394) மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம்ஏன் செய்யப்படுகிறது? மேற்கல்வி, தெளிந்த சிந்தனை பெற


Thursday, May 25, 2023

பங்குனி மாதம்

 

பங்குனி மாதம் என்பது எதற்கு உரிய மாதம்?

வழிபாட்டுக்கு

பங்குனி மாதம் என்பது வேறு எதற்கு உரிய மாதம்?

வணங்குவதற்கும் பூஜைக்கும்

பங்குனி மாதம் என்பது வேறு எதற்குரிய மாதம்? வைபவங்களுக்கான மாதம்.

அற்புதமான பங்குனி மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

தெய்வ மாதம் என்று போற்றுகின்றனர். பங்குனி உத்திரம் யாருக்கு உகந்த விழா?

தமிழ் கடவுள் முருகனுக்கு

பங்குனி மாதத்தில் பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் என்னவாக கொண்டாடப்படுகிறது?

பங்குனி உத்திர திருவிழாவாக

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது எந்த மாதம்?

பங்குனி

அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது எந்த நட்சத்திரம்?

உத்திரம்

பங்குனி உத்திரத்தின் சிறப்பு என்ன?

அந்த நாளில் பௌர்ணமியும் இணைந்து வருவது சிறப்பாகும். தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் எது? பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரத்தன்ற விரதம் இருந்து வழிபட்டால் என்ன நடக்கும்?

நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

அதனால் பங்குனி உத்திர விரதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

திருமண விரதம்

ஸ்ரீராமபிரான்- சீதாதேவி திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

பரதன்- மாண்டவி திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

லட்சுமணன்- ஊர்மிளை திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டது எப்போது? பங்குனி உத்திர நன்னாளில்தான்.

ஸ்ரீவள்ளி அவதரித்த நாள் எது? பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.

தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிறவர் யார்?

தேவேந்திரன்

தேவேந்திரன் இந்திராணி திருமணம் நடைபெற்றது எப்போது?

பங்குனி உத்திர நன்னாளில்தான்.

நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,

அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது யார்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,

சந்திர பகவான் 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது எப்போது?

இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.

ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டது எப்போது?

பங்குனி உத்திர நாளில்

ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டதுதால் மகிழ்ந்த திருமால் என்னசெய்தார்?

தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது எது?

புராணம்

எந்த புராணம்?

விஷ்ணு புராணம்.

தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது யார்?

படைப்புக்கடவுளான பிரம்மா

அது எப்போது வைத்துக் கொண்டார்?

பங்குனி உத்திர நாளில்தான்!

ஐயப்ப அவதாரம் நிகழ்ந்தது எப்போது? பங்குனி உத்திர நாளில்தான்!

நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க சித்திரையே

வா“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமைக்குரிய தமிழினம் ஆனது ஒவ்வொரு வருடமும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கோலாகலமாக கொண்டாடுகிறது.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் உலக தமிழர்களால் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே வானியல் ஜோதிடங்களில் சிறந்து விளங்கியதால் ஒரு தமிழ் ஆண்டு காலரீதீயாக சிறப்பாக கணிப்பிட படுகின்றது.

அதாவது சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் வருடம் மீன ராசியில் பிரவேசிக்கும் போது முடிவடைகின்றது. இதனடிப்படையில் பஞ்சாங்கங்களின் வாயிலாக தமிழ் புத்தாண்டானது கணிப்பிடப்படுகிறது.

சித்திரை மாதம் காலநிலை அடிப்படையில் வசந்த காலத்தின் ஆரம்பமாகும் இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்கின்றனர்.

தமிழ் புத்தாண்டின் வரலாறு சித்திரையின் மரபுகள் சிறப்புக்கள் என்பவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

தமிழர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள். இதனால் பண்டிகைகளை பருவகாலங்களுக்கு ஏற்ப கொண்டாடினார்கள்.

தமிழர்களின் நாட்காட்டி 12 ராசிகளை அடிப்படையாக கொண்டதாகும். இதனால் ராசிகளில் முதலாவதான மேட ராசியில் சூரியன் ​ முதல் நாள் தமழிர்களின் புதுவருடம் ஆகும்.

இதை சங்க இலக்கியமான நெடுநல்வாடை “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணுர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து” குறிப்பிடுகிறது.

மேலும் அகத்தியாயிரம் புட்பவிதி நூலின் மூலம் சித்திரை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன.

சித்திரை புத்தாண்டு பலவகையான சம்பிரதாயங்களை கொண்டதாகும். புத்தாண்டு ஆரம்பித்து விட்டால் வீடுகளில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.

புத்தாடை வாங்குதல், மருத்துநீர் வைத்து நீராடல், இனிப்பு பண்டங்களை பரிமாறி கொள்ளல், பொங்கல் இடுதல், கைவிசேடம் பெறுதல் சுபநேரத்தில் புதிய தொழில்களை ஆரம்பித்தல், பெரியவரக்ளிடம் ஆசி பெறுதல்,

கிளித்தட்டு, ஊஞ்சல், மாட்டுவண்டில் சவாரி, ஏறுதழுவுதல் என தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் வழிபாடுகளோடு மங்களகரமாக மக்கள் புத்தாண்டை வரவேற்பர்.

தமிழர்கள் உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது பண்பாடான பண்டிகையை கொண்டாட தவறவில்லை.

தமிழ் மாதங்களிள் ஒவ்வொரு மாதங்களும் தனி சிறப்புடையன. அவற்றில் சித்திரை தனித்துவமானது.. அம்மாதத்தின் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதனால் இம்மாதம் சித்திரை என அழைக்கப்படுகிறது.

“சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம். காலநிலை ரீதியாக சித்திரை சிறுமாரி என்று குறிப்பிடுவார்கள்.

இக்காலத்தில் நெல் விதைப்பில் சிறுபோகம் ஆரம்பமாவதுடன் விவசாயிகள் பயிர்செய்ய ஆரம்பிப்பார்கள். இவ்வாறு பல மகத்துவங்களை தன்னகத்தே கொண்டது இம்மாதமாகும்.