Saturday, May 2, 2026

 உணர்வுபூர்வமாக உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் இது ஒரு உண்மைக் கதை. இந்தக் கதையின் நாயகியான இந்த இளம் பெண் இன்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அக்கரப்பத்தனையில் பால் பண்ணை ஆரம்பித்து நடத்தி வருகிறார். 200 வருட கால வரலாற்றைக் கொண்ட மலையகத்தின் விதியை மாற்றி அமைக்கத் துணிந்த இவர் அவுஸ்திரேலியாவில் இருந்து பசுக்களை இறக்குமதி செய்து தனது பாற் பண்ணையை விஸ்தரித்து பாற்பொருட் உற்பத்திகளை மேலும் அதிகரித்து ஒரு ஐம்பது அறுபது பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முயற்சித்து வருகிறார். தன்னைப் போல மேலும் பலரை உருவாக்க முயற்சித்து வருகிறார். தற்போது இவரது பண்ணையில் ஐந்தாறு பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். பாற்பொருட்களை உற்பத்தி செய்து விநியோகத்து வருகிறார்.

மலையகத் தியாகிகள் ஒன்றியத்தின் மலையகச் செம்மல் விருது பெற்ற ஒரு பெண் தொழில் முயற்சியாளர் இவர்.
தன்னைப் போல் பலரையும் உருவாக்க நினைக்கின்ற லட்சியத்தை கனவாகக் கொண்டு வாழுகின்ற இவ்வாறான ஒரு பெண்ணுக்கு வழங்கப்படுகின்ற விருது ஒரு லட்சம் விருதுகளை வழங்கியதற்கு சமம்.

 


 


 டொக்டர், சட்டத்தரணி, பிரதேச சபை

தலைவர் மூவரும் பெண்கள்
தினகரனின் 94வது ஆண்டு விழாவையொட்டி அக்கரைப்பத்தனையில் மலையகத் தியாகிகள் ஒன்றியம் நடத்திய மலையகச் செம்மல் விருது வழங்கும் விழாவில் அதிதிகளாக கலந்து கொண்ட அந்தப் பகுதிகளில் பிறந்து வளர்ந்து டொக்டராகவும் சட்டத்தரணியாகவும் விளங்கும் மலையகப் பெண்கள் அக்கரைப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சத்தியமூர்த்தி ரதிதேவிக்கு விருது வழங்கி கௌரவித்தபோது எடுத்தப்படம்.

 තිනකරන් පුවත්පතේ 94වෙනි සංවත්සරය වෙනුවෙන් නුවරඑළිය දිස්ත්රික්කයේ පිහිටා ඇති අගරපතන නගරයේ කන්දුරට සංවිධානය පැවත් වු සම්මාන උළෙලේ


 இந்திய அரசாங்கம் காலத்தின் தேவை கருதி ஆற்றிய சிறப்பான பணியொன்றில் இந்திய இராணுவ வீரருடன்....




2025 ஆம் ஆண்டு டிசம்பரில் வீசிய டித்வா புயலில் மாதம்பை இரணவில பாலம் சேதமுற்றது அதனை இந்திய இராணுவத்தினர் இரவு பகல் பாராது கடமையாற்றி ஒரு வார காலத்தில் நிறைவு செய்தனர். இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்த நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இங்கு வாழுகின்ற மீனவர்கள் இந்த ஆற்றை கடப்பதற்கு இது வரை காலமும் இயந்திரப் படகொன்றையே நம்பி இருந்தனர். ஒரு நபரிடம் இருந்து இதற்கு 30 ரூபாயும் மோட்டார் சைக்கிலுக்கு 60 ரூபாயும் மூட்டை முடிச்சுகளுக்கு 100 ரூபாயும் செலுத்தி வந்தனர். படகு நிறைய பயணிகள் சேரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் அவர்களது நேரம் வீணானது. அதிக பயணிகள் ஏற்றிச் செல்வதால் படகு கவிழ்ந்தால் உயிராபத்து கூட ஏற்படலாம். இந்த படகு இயங்க எரிபொருள் தேவை. எரிபொருள் கிடைக்காவிட்டால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறிதான். உலகமே எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் ஒரு நிலையில் இந்திய அரசாங்கம் ஆற்றிய பணி போற்றத்தக்கது. இந்த பாலம் இல்லாவிட்டால் தரை வழியாக வருவதாக இருந்தால் 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றிப் பயணம் செய்து தான் வரவேண்டிய இருக்கும்.
All reactions:
Arumugam Raveindran and 19 others
9
Like
Comment
Share