Thursday, November 12, 2026

கடவுள் உங்களுடன் பேச விரும்புவதற்கான அறிகுறி

 கடவுள் உங்களுடன் பேச

விரும்புவதற்கான அறிகுறி

தினமும் அதிகாலையில் யாரோ எழுப்பி விடுவதைப் போல், 3 முதல் 4 மணிக்கும் உங்களுக்கு விழிப்பு வந்துகிறது என்றால் பிரபஞ்ச சக்தி உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக அர்த்தம். விழிப்பு வருவது மட்டுமல்ல, அதற்கு பிறகு மீண்டும் நீங்களே தூங்க முயற்சித்தாலும் உங்களால் தூங்க முடியாமல் இருந்தால் தெய்வ சக்தி உங்களுடன் தொடர்பு கொள்ள நினைப்பதன் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

ஆதிஸ்ரீ ஐயப்ப ஷேத்திரத்தின் புனித சபரிமலை யாத்திரை

 

ஆதிஸ்ரீ ஐயப்ப ஷேத்திரத்தின்

புனித சபரிமலை யாத்திரை

ஆதிஸ்ரீ ஐயப்ப ஷேத்திரத்தின் ​அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கத்தின் ​சபரிமலை தீர்த்த யாத்திரை குழுவினர் வருடாந்தம் நடத்தும் ​புனித சபரிமலை யாத்திரை இம்முறை

​51வது ஆண்டாகவும் நடைபெறவுள்ளது. ​புனித சபரிமலை யாத்திரைக்கான விரதமாலை அணிந்து கொள்ளும் நிகழ்வு கார்த்திகை மாதம் முதலாம் நாளாகிய எதிர்வரும் 17ஆம் திகதி காலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்று கணபதி ஓமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகி 02.01.2027 அன்று மாலை கருப்பண்ணசுவாமி பூஜையுடன் நிறைவு பெறவுள்ளது. பொன். ரவீந்திரகுமாரன், இரா.செந்தமிழ்ச்செல்வன், ஆறுமுகம் சந்திரதாஸ் தலைமையில் பூஜைகள்

அனைத்தும் நடைபெறும்.

இம்முறை சபரிமலை யாத்திரையாக

சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன், திருவெண்காடு, கஞ்சனூர், திருக்கடையூர், திருமுல்லைவாயில், உப்பிலியப்பன், திருநாகேஸ்வரம், கும்பகோணம், திருவிடை மருதூர், சூரியனார் கோவில், திருக்கருகாவூர், திங்களூர், உட்பட பல கோயில்களை தரிசிக்கும் வாயப்பு கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அவிசாவளை, மாதொல, கஸ்தூரி உயன் ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம்

 அவிசாவளை, மாதொல, கஸ்தூரி உயன் ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம்

அவிசாவளை, மாதொல, கஸ்தூரி உயனில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ளது. அன்று காலை 8.05 மணிமுதல் 10.15 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஐயனின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கிரியா கால நிகழ்வுகள் யாவும் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகவுள்ளது. அன்று மகா கணபதி ஹோமம், கிராம சாந்தி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி, தானியாதிராசம், ஜலாதிவாசம், நயனோன் மீளனம், சயனம், கலஸ்தாபனம், யாகசாலை பூஜை மற்றும் முதலாம் கால யாகம் ஆகியவை இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, பிம்ப ஸ்தாபனம், விசேட திரவிய ஹோமம், மகா பூர்ணாகுதி மற்றும் கும்ப வீதி பிரதட்சணம் ஆகியவை நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 9.45 மணிமுதல் 10.15 மணி வரை ஐயனின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, பகல் 12.00 மணியளவில் விசேட அலங்காரப் பூஜையும், மகேஸ்வர பூஜையும் (அன்னதானம்) இடம்பெறும்.

எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், விசேட பூஜை, ஐயனின் மணிமாலை அணிவித்தல் மற்றும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) ஆகியவை நடைபெறவுள்ளன.

ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ இராதா சிவகுமார் சிவாச்சாரியாரின் தலைமையில் இக்கிரியை யாவும் நடைபெறவுள்ளன. இந்த ஆன்மீகப் பெருவிழாவில் அனைத்து பக்த பெருமக்களையும் கலந்துகொண்டு ஐயனின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய ஆதீன கர்த்தா குருசாமி மகேஸ்வரன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

பண்டாரவளை சிறகுகள் இயலிசை நர்த்தனாலயவின் தேனிசை நாட்டிய விழா

 

பண்டாரவளை சிறகுகள் இயலிசை

நர்த்தனாலயவின் தேனிசை நாட்டிய விழா

பண்டாரவளை சிறகுகள் இயலிசை நர்த்தனாலயம் நடத்தும்

தேனிசை நாட்டிய விழா எதிர்வரும் 2026.11.14ஆம் திகதி பி.ப. 1 மணிக்கு பண்டாரவளை சென் ஜோசப் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இசை, நடனம் எனும் கலையால் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இக்கலையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இந்த தேனிசை நாட்டிய விழா நடத்தப்படவுள்ளது. பண்டாரவளையிலுள்ள நடனத்தில் சிறப்பு மிக்க நடன நர்த்தகிகள் இந்த விழாவில் தங்களது நடன நிகழ்வுகளை மேடையேற்றவுள்ளார்கள்.

இதில் சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள். என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.