Wednesday, June 12, 2013

ஐந்து பல்லவிகளில் முழு பாட்டு

நண்பர்கள் கவனத்திற்கு’, ‘பசங்கன்னா அப்படித்தான்’ போன்ற படங்களில் நடித்த மனிஷா ஜித் அடுத்து நடிக்கும் படம் ‘திறப்பு விழா’.
புதுமுகம் ஜெயானந்த் ஹீரோ. இப்படம் பற்றி இயக்குனர் கே.ஜி. வீரமணி கூறியதாவது, வாலிபன் ஒருவனை மனதார காதலிக்கிறார் மனிஷா.
அவனோ காதலைவிட தனது இலட்சியம்தான். முக்கியம் என்று ஒதுங்கி செல்கிறான். இதை கேட்டு ஷொக் ஆகிறார் மனிஷா, அதிர்ச்சி தரும் அளவுக்கு அந்த வாலிபன் கொண்டிருக்கும் இலட்சியம் என்ன என்பதை படம் விளக்குகிறது.
இப்படத்துக்காக 5 பல்லவிகளை மட்டும் வைத்து முழு பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இதை ச. ஞானக்கரவேல் எழுதி உள்ளார். நா. முத்துக்குமார் எழுதிய ‘தட தட தடன்னு ரயில்’, பழனி பாரதி எழுதிய ‘இந்தா இந்தா வாங்கிக்க’ நந்தலாலா எழுதிய ‘பருத்தி பூக்கும்’ போன்ற பாடல்கள் விருத்தாசலம், நெய்வேலி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.
ஆர்.பி. செல்வம் ஒளிப்பதிவு, வசந்தா ரமேஷ் இசை, ஜெரினா பேகம் தயாரிப்பு கதை, வசனம் நிலம்.

சின்னப் பொண்ணு சமாச்சாரம்

இடையில் உங்களுக்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்ததா கேள்விப்பட்டோம்.... அதுலேருந்து மீண்டு, நீங்க மறுபடி பாட ஆரம்பிச்சது கடவுள் செயல்னு நீங்க கூட ஒரு மேடையில் சொல்லியிருக்கீங்க..... என்னாச்சு ‘2008 ஆம் வருஷம்.... நான் பாடியிருந்த ‘நாக்க மூக்க....’ பாட்டு எக்குத்தப்பா பிரபலமாயிருந்த நேரம்.... நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நல வாரிய கூட்டத்துல கலந்துக்கிட்டு, சென்னையிலேயிருந்து கும்பகோணத்துக்குத் திரும்பிக்கிட்டிருந்தோம்.
கணவரோட தம்பிதான் வண்டியை ஓட்டுச்சு. கோவிலாச்சேரில எதிர்ல வந்த கவர்மென்ட்டு பஸ் மோதிடுச்சு. கணவரோட தம்பி ஸ்பாட்லயே இறந்துடுச்சு. என் வீட்டுக்காரருக்கு எந்த அடியும் இல்லை. எனக்கு மண்டை, நெத்தியில பயங்கரமான அடி.... மயக்கமாயிட்டேன்.
கண் விழிச்சுப் பார்த்த பிறகுதான் நடந்த எல்லாம் தெரியும். அத்தனை சோகத்துலேயும் என கவலையெல்லாம் ‘என்னால மறுபடி பழையபடி பாட முடியுமாங்கிறதா இருந்தது. ‘இவங்களை சங்கீதம் இருக்கிற மாதிரியான சூழல்லயே வச்சிருங்கன்னு டாக்டருங்க சொன்னாங்க.
நிறைய பாட்டு கேட்டேன்.... கச்சேரிகளுக்குப் போனேன்.... என் நம்பிக்கை வீணாகலை. பூரணமா குணமாகி, மறுபடி பாட ஆரம்பிச்சேன். புருஷனைப் பறிகொடுத்துட்டு நின்ன என் கணவரோட தம்பி மனைவிக்கு மறுமணம் செய்து வச்சிட்டேன்.
உங்க கணவர், குழந்தைங்க பத்தி சொல்லுங்களேன்.
“கணவர் குமார்... ஆட்டக்கலைஞர். அவர் என்னைக் காதலிச்சதே, என் இசைக்காகத்தான். என்னோட இந்த வளர்ச்சிக்குப் பின்னணியில் நிற்கிறவர் அவர்தான்.
19 வயசுலயே எனக்குக் கல்யாணமாயிடுச்சு. மகள் மோகனா, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா. மகன் அறிவழகன், பிளஸ் ஒன் படிக்கிறான். பொண்ணு அப்படியே அச்சு அசலா என் குரல்லயே பாடுவா.
கர்நாடக சங்கீதம் கத்துக்கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். என் கணவருக்கு விருப்பமில்லை. நமக்குத் தெரியாததை ஏன் அவங்களுக்கு சொல்லித் தரணும்னு கிராமிய இசையைப் படிக்க ஊக்கப்படுத்திட்டிருக்கார்....
சல்மா: யாரோட மியூசிக்ல பாடணும்னு உங்களுக்கு ஆசை?
‘கடவுள் புண்ணியத்துல எல்லா ஜாம்பவான்கள் இசையிலேயும் பாட வாய்ப்புகள் வந்திட்டிருக்கு. வித்யாசாகர் சார் அறிமுகப்படுத்தி வச்சார். அடுத்து ‘மயிலு படத்துல இசைஞானி இசையில பாடற மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைச்சது.
பாட்டைக் கேட்டுட்டு ‘சூப்பர்.... தேங்க் யூன்னு அவர் பாராட்டினது ஆஸ்கார் அவார்டு வாங்கினதுக்கு சமம். அடுத்து ‘ராவணன்’ படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல பாடிட்டேன்.
யார் கூட சேர்ந்து பாடணும்னு ஆசை?
“எஸ்.பி.பி. சார் கூடவும், யேசுதாஸ் சார் கூடவும் பாடணுங்கிறதுதான் ரொம்ப நாள் கனவு!

உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத

உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கொளரதான் தூக்கி விடாத
அடி ஒன்னாம் கிளாஸ் போன்னபோல ரொம்ப பண்ணாத
உன்னைத்தானே தேடி வந்தேன் தள்ளி ஓடாத
ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து வட்டமிட்ட
பாத்து ரசி கட்டம்கட்ட ஆசபடதே
ஹே டெட்டொல் ஊத்தி சுத்தம் செஞ்சே


தேவி ஸ்ரீ பிரசாத்
வெண்ணிலவ நின்னுகிட்டு
என்ன எங்கே ஏதோ செய்யாத
ஹே ஆயிரம் ஆசிய வெச்சிருந்தும் என்ன வாட்டுன
உன் கண்ணுக்குளே கண்ணுக்குளே
கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கொளரதான் தூக்கி விடாதே
நீ வேகத்துல சிரிச்சாலே Western Music


விவேகா
வெறும் காலில் நடந்தாலே Luck போஒமிக்கு
நீ தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் மேனிக்கு
அழகே நீ வந்தாலே Energy Tonic

நா பரப்பான கம்புடேற மாரிபோனேனே
உன் கை பட்ட Immediatea Restart ஆவேனே
ஹே Strawberry Babya Robery பண்ண பாக்குற
உன் கண்ணுக்குளே... கண்ணுக்குளே...
உன் கண்ணுக்குளே... கண்ணுக்குளே...
கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
ஜாவட் அலி,
ஹே எக்கச்சக அழகோட திரியும் சல்வாரே
உனக்காக வரலாண்டி மூன்றாம் World Ware
உன்னுடைய நடிப்புக்கு தரலாம் Oscare
நீ வைக்கும் இசில் நா மறந்தேன் என் பெற
நீ மூக்கு மேல் கோவப்பட்ட கன்னம் சிவக்கும்
அதில் வானவில்லின் எல்லாம் வரும் வண்ணம் இருக்கும்
பாக்குற பார்வையில் பத்து கிலோ என்ன கூடுற

பிரியா ஹிமாஸ்,
உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கொளரதான் தூக்கி விடாத
அடி ஒன்னாம் கிளாஸ் போன்னபோல ரொம்ப பண்ணாத
உன்னைத்தானே தேடி வந்தேன் தள்ளி ஓடாத
படம்: சிங்கம் 2
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இயற்றியவர்: விவேகா
பாடியவர்கள்: ஜாவட் அலி, பிரியா ஹிமாஸ், சீமன்

Tuesday, June 11, 2013

இது இறவா குரல்...

சாகாவரம் படைத்த பல்லாயிரம் பாடல்களை தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு கண்ணை மூடி நம்மையெல்லாம் பிரிந்து சென்று விட்டார் டி. எம். எஸ். அந்த சிம்மக் குரலோனின் பாடல்கள் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.
இது தாண்டா குரல்... இப்படித்தாண்டா பாடனும்... இவன் தாண்டா பாடகன் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் ஒரு அபூர்வக் கலைஞன் டி. எம். எஸ். என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டி.எம். செளந்தரராஜன், பிறப்பால் செளராஷ்டிரர் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளத்தில் தனி இடம் பிடித்த உண்மையான தமிழன் டி. எம். செளந்தரராஜன், தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த குரல் டி. எம். எஸ். ஸின் கம்பீரக் குரல்.
பக்தியில் பரவசம்: பக்திப் பாடல்கள் என்றாலும் சரி, சினிமாப் பாடல்கள் என்றாலும் சரி, அந்தந்தப் பாடல்களின் பாவத்தை அப்படியே பிழிந்து தருவதில் டி. எம். எஸ்ஸ¤க்கு நிகர் அவரேதான்.
முருகன் பாடல்களை இவரைப் போல் யாருமே பாடியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் டி. எம். எஸ். ஸின் முருகன் பாடல்கள் இன்று வரை ஒலித்துக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் பக்தி ரசம்... பக்திப் பரவசம்..
பாச மலர் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரிக்கு நிகராக ஒவ்வொரு ரசிகரையும் அழ வைத்தவர் டி. எம். எஸ். மலர்ந்தும் மலராத... பாடலை இப்போது கேட்டாலும் அழுது விடுகிறோம்.
அப்படி ஒரு அருமையான பாடல் அது. அதைவிட டி. எம். எஸ். அதை ரசித்து, நெகிழ்ந்து, உருகிப் போய்ப் பாடிய பாடல்.. சிவாஜி பாடுகிறாரா, இல்லை டி. எம். எஸ். பாடுகிறாரா என்றே தெரியாத அளவுக்கு கரைந்து போன ஒரு கந்தர்வக் குரல் அது... இந்தப் பாடல் இருக்கும் வரை உங்களை நினைத்து அழுது கொண்டே இருப்பார்கள் தமிழர்கள்....
ஐவ்வாது மேடையிட்டு... சர்க்கரையில் பந்தலிட்டு கேட்க கேட்க போதையூட்டும் பாட்டு இது. அதிலும் டி. எம். எஸ். இந்தப் பாடலுக்கு காட்டிய குரல் பாவமும், வார்த்தைகளை உச்சரித்த விதமும், நிச்சயம் எந்த ஒரு பாடகருக்கும் வராத அசாத்திய திறமை என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி ஒரு பாடலை இப்போது பாட எந்தப் பாடகனுமே இல்லை என்று அடித்துக் கூறலாம்.
அப்படி ஒரு அசாதாரணமான, அலாதியான பாடல் இது. அமைதியான நதியினிலே ஓடம்.... அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ராத்திரி நேரத்தில் இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்... எவ்வளவு மன பாரம் இருந்தாலும், மன வேதனை இருந்தாலும், சோகம் இருந்தாலும் அப்படியே பஞ்சு போல பறந்தோடி விடும்... என்ன ஒரு அழகான பாடல். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.... அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்... இந்தப் பாடலில் ஒரு காதல் தோல்வியின் விரக்தியை அப்படிக் கொடுத்திருப்பார் டி. எம். எஸ். எழுதிய கண்ணதாசனைப் பாராட்டுவதா.... இல்லை குரலில் அத்தனை பாவத்தைக் காட்டி பாடலுக்கு உயிர் கொடுத்த டி. எம். எஸ். ஸின் குரலைப் பாராட்டுவதா...
தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அழகான காதல் பாடல்... கேட்க கேட்க மனசெல்லாம் லேசாகி காற்றில் பறக்கத் தூண்டும்... அப்படி ஒருகாதல் குரல் இதைப் பாடிய டி. எம். எஸ்ஸ¤க்கும், பி. சுசீலாவுக்கும். இன்று வரை நாடி நரம்புப் புடைக்கும், காதல் உணர்வுகளைத் தூண்டும் கலாபப் பாடல்... எழுத எழுத அழுகை வருகிறது. டி. எம். எஸ்.... தமிழ் உலகம் உங்களை நிச்சயம் மறக்க முடியாது.

கடமையின் எல்லை

கடமையின் எல்லை 1966 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் திரைப்படம் ஆகும். யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் தேவன் அழகக்கோன், எம். உதயகுமார், ஏ. ரகுநாதன், ஜி. நிர்மலா, பொனி ரொபோட்ஸ் முதலானோர் நடித்தார்கள். தயாரிப்பாளர் எம். வேதநாயகம் இத்திரைப்படத்தை இயக்கியதோடு இசையமைப்பையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வித்வான் ஆனந்தராயர், பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோர் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதினார்கள். வி. முத்தையா, கமலலோஜனி, அம்பிகா தாமோதரம், புவனேஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் குதிரையோட்டம் முதலான காட்சிகளை எடுத்திருந்தார்கள்.
தயாரிப்பாளர் - இயக்குனரான எம். வேதநாயகம் இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே காலமாகி விட்டார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் கமலநாதனாக நடித்தவர் இலங்கையில் கராத்தே கலையை பிரபலமடையச் செய்தவரான கிறாண்ட் மாஸ்டர் பொனி ரொபேர்ட்ஸ். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்முனையைச் சேர்ந்தவராவார்.
இணை ஒளிப்பதிவாளராக பங்காற்றிய கலைஞர் ஏ. ரி. அரசு (திருநாவுக்கரசு) நடிகர், நிழல் படப்பிடிப்பாளர் என்பதோடு சிறந்த ஒப்பனைக் கலைஞருமாவார்.

புதுமுகங்களுக்கான தேர்வில் விஜயகுமார்

டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார் அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார். சிவாஜியும், பத்மினியும் நடித்த ‘ஸ்ரீவள்ளி’ படத்தில் பாலமுருகனாக நடித்தாலும் அதற்குப் பிறகு புதிய படங்கள் எதுவும் விஜயகுமாருக்குக் கிடைக்கவில்லை.
இதனால் நாடகங்களில் நடித்தபடி, சினிமா வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார். நாலைந்து வருடம் இதே நிலை நீடித்தது. ஆனாலும் சோர்ந்து விடாமல் எஸ். வி. எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இந்தசமயத்தில் டைரக்டர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” படம் வந்தது. காதலை புதிய கோணத்தில் அணுகிய காட்சிகள் ஸ்ரீதருக்கு பெரும் புகழைத் தந்ததோடு, படத்தையும் வெற்றிப் பட்டியலில் சேர்த்தது. இந்தப் படம் வெளிவந்த நேரத்தில் வையாபுரி ஜோதிடர் மூலம் விஜயகுமாருக்கு நடிகர் முத்துராமன் அறிமுகமானார்.
முத்துராமன் படங்களில் நடித்து வந்ததோடு நாடகங்களிலும் நடித்தார். அப்போது ‘வடிவேல் வாத்தியார்’ தேரோட்டி மகன் நாடகங்கள் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தன. முத்துராமன் படங்களில் வளரத் தொடங்கிய நேரமாதலால், அப்போது அவர் நடித்து வந்த இந்த நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நேரம் கிடைக்காத நிலை அதனால், தான் நடித்து வந்த கேரக்டரில் விஜயகுமாரை நடிக்க வைக்க முத்துராமனே சிபாரிசு செய்தார்.
இதைத் தொடர்ந்து “சுயம்வரம்” என்ற புதிய நாடகத்திலும் விஜயகுமாருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இதில் ‘இரவும் பகலும்’ பட நாயகி வசந்தா, காந்திமதி ஆகியோரும் நடித்தார்கள். இரவில் நாடகத்தில் நடிப்பது, காலையில் பட வாயப்புக்கான முயற்சி என்று விஜயகுமார் தீவிரப்பட்டது இந்த சமயத்தில்தான்.
இந்த நேரத்தில்தான் டைரக்டர் ஸ்ரீதர் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வந்தார். இதே மாதிரியான எண்ணம் மற்ற டைரக்டர்களுக்கும் இருந்தது. இதனால் டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர்கள் ராமண்ணா, பீம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், பி மாதவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து ‘மூவி மேக்கர்ஸ் கவுன்சில்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.
இந்த அமைப்பு மூலம் புதுமுகங்களைத் தேர்தெடுத்து படம் தயாரிப்பது அவர்கள் எண்ணம் இதற்காக புதுமுகத் தேர்வும் நடத்தினார்கள். அதில் விஜயகுமாரும் கலந்து கொண்டார். அதுபற்றி அவர் கூறுகிறார்.
டைரக்டர் ஸ்ரீதர் புதுமையை விரும்பினார் துணிச்சலாக தனது படங்களில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.
புதுமுகங்களை தேர்ந்தெடுக்க ஸ்ரீதரும் மற்ற டைரக்டர்களும் இணைந்து “மூவி மேக்கர்” கவுன்சில்’ தொடங்கினர். இதுபற்றி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஐந்தாறு வருடங்களாக புதியவர்கள் சினிமாவுக்குள் வர முடியாமல் இருந்த நிலை. இனி மாறும் என நம்பிக்கையும் ஏற்பட்டது.
புதுமுகம் தேர்வு சென்னையில் உள்ள நார்த்போக் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம். பார்க்கிற முகங்களில் எல்லாம் ‘கதாநாயக’ களை. இந்த அமைப்பில் டைரக்டர் ராமண்ணாவும் இருந்ததால், நிச்சயம் நாம் தேர்வு செய்யப்பட்டு விடுவோம் என்று நம்பினேன்.
இந்த இடத்தில் டைரக்டர் ராமண்ணா பற்றி சொல்லியே ஆகவேண்டும் ‘ஸ்ரீவள்ளி’ படத்திற்குப் பிறகு, நேரம் வரட்டும் நானே கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.” என்று சொல்லியிருந்தார். அதனால் நாடகங்களில் நடித்தாலும் அவ்வப்போது வந்து அவரிடம் ஆஜர் கொடுத்து விடுவேன்.
இந்த மாதிரியான ஒரு வேளையில் அவர் “சொர்க்கத்தில் திருமணம்” என்ற படத்தை இயக்கினார். படத்தின் ஹீரோயின் லதா. என்னை ஹீரோவாக போட ராமண்ணா முடிவு செய்திருந்தார். ஆனாலும் ரவிச்சந்திரனே ஹீரோவாக நடித்தார். இதனால் நான் மனதளவில் உடைந்து போய்விடக் கூடாது என்பதற்காக படத்தில் லதாவை ஒருதலையாக விரும்பும் ஒரு கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார்.
இப்படி நம் மேலும் அக்கறைப்பட ஒரு டைரக்டர் இருக்கிறார் என்பது இயல்பாகவே ஒரு தைரியத்தை என் மனதிற்குள் ஏற்றி வைத்திருந்தது. தேர்வுக் குழுவில் டைரக்டர் ராமண்ணாவும்இடம் பெற்றிருந்ததால் நிச்சயம் தேர்வாவோம் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது.
என்முறை வந்தபோது, ஏதாவது ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார்கள். நான் அப்போது நடித்துக்கொண்டிருந்த “வடிவேலு வாத்தியார்” நாடகத்தில் நான் நடித்த ஒரு காட்சியை நடித்துக் காட்டினேன்.
ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு வந்த இடத்தில் தேர்வானவர்கள் ஐந்தே ஐந்து பேர்தான் அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன் ஆம்பூர் பாபு, ‘அலைகள்’ செல்வகுமார் ஆகியோரும் இந்த ஐவர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.
ஆனாலும் 2 பேர் மட்டும்தான் அப்போது தேவை என்பதற்காக டைரக்டர்கள் குழு மீண்டும் பரிசீலனை செய்தது. முடிவில் அலைகள் செல்வகுமார், ஆம்பூர் பாபு ஆகியோரை எடுத்துக் கொண்டு மற்ற 3 பேரிடமும் ‘முகவரியைக் கொடுத்து விட்டுப் போகங்கள் பிறகு தகவல் தெரிவிக்கிறோம்” என்றார்கள்.
எனக்குக் கோபம் வந்துவிட்டது. என் மீது அக்கறையுள்ளவர் என்பதால் டைரக்டர் ராமண்ணாவை சந்தித்து என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.”என்ன சார் நீங்கள் இருந்தும் எனக்கு இப்படி ஆகிவிட்டதே” என்றேன் வேதனையுடன். நான் இப்படிக் கூறியதும் ராமண்ணாவிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வந்தன. “என் வேதனைபுரியாமல் சிரிக்கிaர்களே அண்ணா” என்றேன்.
பதிலுக்கு அவரோ, “இவங்க படம் எதுவும் எடுக்க மாட்டாங்க. நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நான் இருக்கிறேன்” என்றார்.
மூவி மேக்கர்ஸ் கவுசில் பற்றி அவர் சொன்னது உண்மையாயிற்று கடைசி வரை அவர்கள் படமே எடுக்கவில்லை.
இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

பஸ்ஸில் எஸ். எஸ். ஆருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம். ஜி. ஆர்.


பஸ்ஸில் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம்.ஜி.ஆர் என்று படபடவென்று பழைய நினைவுகளைக் கொட்டினார் ‘லட்சிய நடிகர்’ எஸ். எஸ். ஆர். “எம். ஜி. ஆர். ஆரம்ப காலத்தில் எப்படியிருப்பார் தெரியுமா? தோளைத் தொடும் அளவிற்கு பாகவதர் முடி, கழுத்தில் ருட்ராட்சம், நெற்றியில் விபூதிப்பட்டை, இடுப்பில் காவி கதர் வேட்டி, கதர்ச்சட்டை என்று அந்த கெட் - அப்பே பிரமாதமா இருக்கும்.
அப்போது ‘அசோக்குமார்’ உட்பட சில படங்களில் தியாகராஜ் பாகவதரோடு சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டி ருந்தார். நான் ‘டி. கே. எஸ். சகோதரர் கள் நாடக சபாவில்’ என். எஸ். கே, எஸ். வி. சுப்பையா, எம். என். ராஜம் போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு, நண்பர்களைப் பார்க்க அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து ஏறுகிறேன்.
அதே பஸ்ஸில் எம். ஜி. ஆரும் ஏறுகிறார். அவர், கலைஞர், நம்பியார் போன்றோர் அப்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாச சம்பளத்திற்குப் பணியாற்றுகிறார்கள். எம். ஜி. ஆரைப் பார்த்து விட்டு ‘வணக்கம்’ சொல்கிறேன். அப்போது தான் முதன் முறையாக நாங்கள் பேசுகிறோம். ‘வாங்க தம்பி’ என்று வாஞ்சையாக அழைத்து, எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். ‘பெரிய ஆளா வருவீங்க.....’ என்று வாழ்த்தினார்.