Tuesday, June 11, 2013

பஸ்ஸில் எஸ். எஸ். ஆருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம். ஜி. ஆர்.


பஸ்ஸில் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம்.ஜி.ஆர் என்று படபடவென்று பழைய நினைவுகளைக் கொட்டினார் ‘லட்சிய நடிகர்’ எஸ். எஸ். ஆர். “எம். ஜி. ஆர். ஆரம்ப காலத்தில் எப்படியிருப்பார் தெரியுமா? தோளைத் தொடும் அளவிற்கு பாகவதர் முடி, கழுத்தில் ருட்ராட்சம், நெற்றியில் விபூதிப்பட்டை, இடுப்பில் காவி கதர் வேட்டி, கதர்ச்சட்டை என்று அந்த கெட் - அப்பே பிரமாதமா இருக்கும்.
அப்போது ‘அசோக்குமார்’ உட்பட சில படங்களில் தியாகராஜ் பாகவதரோடு சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டி ருந்தார். நான் ‘டி. கே. எஸ். சகோதரர் கள் நாடக சபாவில்’ என். எஸ். கே, எஸ். வி. சுப்பையா, எம். என். ராஜம் போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு, நண்பர்களைப் பார்க்க அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து ஏறுகிறேன்.
அதே பஸ்ஸில் எம். ஜி. ஆரும் ஏறுகிறார். அவர், கலைஞர், நம்பியார் போன்றோர் அப்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாச சம்பளத்திற்குப் பணியாற்றுகிறார்கள். எம். ஜி. ஆரைப் பார்த்து விட்டு ‘வணக்கம்’ சொல்கிறேன். அப்போது தான் முதன் முறையாக நாங்கள் பேசுகிறோம். ‘வாங்க தம்பி’ என்று வாஞ்சையாக அழைத்து, எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். ‘பெரிய ஆளா வருவீங்க.....’ என்று வாழ்த்தினார்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பாள் என்று அமைதி கொண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைக் தேரினில் பறந்து சென்றான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைக் தேரினில் பறந்து சென்றான்
ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் காலங்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்
மலர்களைப் போல தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

Wednesday, June 5, 2013

தமிழ் தெரியாததால் வந்த வினை

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. நடிகர் விஜய்யால் சின்ன அசின் என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது கரு பழனியப்பனின் ஜன்னல் ஓரம் உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* அப்பப்ப வர்றிங்க போறிங்க திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாதது ஏன்?
நான் சினிமாவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சில படங்களில் நடித்ததுடன் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு டான்ஸ் பக்கம் போய் விடலாம் என நினைத்தேன் சினிமா என்னை, ஈர்த்துவிட்டது இப்போது தமிழில் பிசியாகி விட்டேன் நிலையான நடிகைகளின் வரிசையில் நானும் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
* பெரிய ஹீரோக்களுடன் நடிக்காதது ஏன்?
எனக்கே ஒன்றும் புரியவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எந்த ஆதரவும் இல்லாமல்
சினிமாவுக்கு வந்தேன். முடிந்தவரை நல்ல படங்களில் நடிக்க வேண்டும் அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் அவசரம் காட்டவில்லை.
* தமிழில் முதலில் நடித்த அனுபவம் குறித்து?
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் தான் முதலில் தமிழில் அறிமுகமானேன். மொழி புரியாததால், நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன். சில காட்சிகள், ஏழு டேக் வரை போயின. இதை நினைத்து அழுதிருக்கிறேன். ஆனால், இயக்குனர் திருமுருகன் தான், எனக்கு ஆறுதல் கூறி நடிக்க வைத்தார்.
* நடித்ததில் பிடித்தது?
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை, அடிக்கடி போட்டுப் பார்ப்பேன். எனக்கு, ரொம்ப பிடித்த படம் அது. எந்தெந்த காட்சிகளில் நன்றாக நடிக்கவில்லை என்பதை பார்த்து வைத்திருக்கிறேன். இனி, படங்களில் நடிக்கும்போது அந்த குறை வராமல் பார்த்துக்கொள்வேன்.
* எப்படிப்பட்ட கெரக்டர்களில் நடிக்க விரும்புகிaர்கள்?
சின்ன வயதிலிருந்து டான்ஸ் கற்றிருக்கிறேன். நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள கெரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஹீரோயின்களை பொறுத்தவரை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் தான், பீல்டில் நிக்க முடியும். ஆனால் ரேவதி, ஷோபனா, சுகாசினி போன்றவர்கள், பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டனர். அதற்கு அவர்கள் நடித்த கெரக்டர்கள் தான் காரணம். அதேபோன்ற கெரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன்.
* சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தா...?
நிஜமா சொல்றேன் டான்ஸ் டீச்சர் ஆகியிருப்பேன். என் கனவே அதுதான் என்றாவது ஒருநாள் நிச்சயம் நான் டான்ஸ் டீச்சர் ஆவேன்.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
தமிழ் சினிமா எனக்கு தூரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இப்ப ஷ¥ட்டிங் எல்லாம் ஐதரபாத்தில் தான். சென்னை மக்கள் இங்குள்ள சாப்பாடு எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றேன். கூடிய சீக்கிரமே சென்னைக்கு ஷிப்ட் ஆயிடுவேன். என் படங்களுக்கு ரசிகர்களாகிய உங்களது சப்போர்ட் ரொம்ப வேண்டும் மைனஸா இருந்தால் மன்னிச்சிடுங்க சீக்கிரம் ப்ளஸ் ஆக்கிடுறேன். நிறைய செலஞ்சிங் ரோல் பண்ணனும் நல்ல கதையில் நடிக்கணும் எல்லாத்துக்கும் மேல உங்க அன்பு வேண்டும்.

இளம் ஹீரோக்களை மயக்கும் மாது

சூதுகவ்வும் படத்தில் விஜயசேதுபதியின் கற்பனை காதலியாக வந்து சென்றவர் சஞ்சிதா ஷெட்டி. அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு நடித்த அவர், தொடை தெரியும் அரை டவுசர் கொஸ்டியூம் அணிந்தவர், சில காட்சிகளில் சற்று தூக்கலான கிளாமரையும் வெளிப்படுத்தியிருந்தார். அதனால்தான், அவரை அப்படத்தின் ஹீரோயினியாக பப்ளிசிட்டிகளில் கொண்டு வந்தனர்.
அதோடு, படமும் ஓடி விட்டதால், இப்போது கோடம்பாக்கத்தி மினிமம் பட்ஜெட் ஹீரோக்களின் கவனத்துக்கு வந்துவிட்டார் சஞ்சீதா, அதிலும், கதைக்கு கிளாமர் அவசியம் என்று சொல்லிவிட்டால், எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவும் தயாராயிருகிறாராம் அவர்.
அதனால் பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக வில்லா -2 படத்திற்கு கமிட்டாகியிருக்கும் சஞ்சிதா கொமர்சியல் இயக்குநர்களின் கண்கண்ட கதாநாயகியாகி விட்டார். அதனால் தற்போது 3 படங்களுக்கு கதை கேட்டிருக்கும் சஞ்சிதாஷெட்டியின் சம்பளமும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் இதுவரை மங்களூரில் இருந்து கொண்டு கொலிவுட்டுக்கு விசிட் அடித்துக் கொண்டிருந்த சஞ்சிதா, இப்போது சென்னையிலேயே முகாமிட்டு படவேட்டை நடத்தி வருகிறார்.



சின்னப் பொண்ணு

* ‘மயிலு’ படத்துல நடிச்சிருக்கீங்க போல....
“முதல்ல அந்தப் படத்துல பாடறதுக்குத்தான் கூப்பிட்டாங்க. பாட்டுக்கு இடையில் சில வசனங்கள் வரும். அதை உச்சரிக்கிறதைக் கேட்டுட்டு அந்த கேரக்டர்ல நீங்களே நடிச்சா நல்லாருக்கும்னு சொல்லிட்டாங்க. ஹீரோயினுக்கு அம்மாவா, படம் முழுக்க வருவேன்.
ப்ரியா: கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு டிசம்பர் சீசன் மாதிரி, நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு ஏதாவது சீசன் உண்டா?
“தை பிறந்தால் வழி பிறக்கும்னு எங்களுக்காகவே சொன்னாங்களோ என்னவோ.... தை மாசம் பிறந்துட்டாலே, அடுத்த 6 மாசத்துக்கு திருவிழா, கல்யாணம், கச்சேரின்னு சாப்பாடு, தூக்கம் இல்லாத அளவுக்கு ஓடிக்கிட்டே இருப்போம்!
* இரட்டை அர்த்தம் தொனிக்கிற நாட்டுப்புறப் பாடல்களைப் பாடறப்ப, ஒரு பெண்ணா எப்படி ஃபீல் பண்ணுவீங்க?
“பொதுவா நாட்டுப்புறப் பாடல்கள்ல அப்படி எந்தவிதமான ரெட்டை அர்த்தமும் கிடையாது. கிண்டலும் கேலியும் இருக்குமே தவிர, ஆபாசம் இருக்காது. சினிமாவுல வர்ற கிராமியப் பாடல்கள்ல சில நேரம் ரெட்டை அர்த்தம் கலந்து இருக்கும். வருத்தமாத்தான் இருக்கும். ஆனாலும், ஜனங்க ரசிக்கிறாங்களே.... அப்புறம் நாங்க எப்படிப் பாடமாட்டேன்னு மறுக்க முடியும்?
* மெலடி பாடணும்னு ஆசைப்பட்டதுண்டா?
“ஆசை இருக்கும்மா..... ஆனா, என்னோடது ஓப்பன் வாய்ஸ். மெலடிக்கு பொருந்துமான்னு தெரியலை. ‘சித்ராம்மாவுக்கு ஒரு ‘கோலவிழியம்மா....’ கொடுத்து, அவங்களால் அந்த ஸ்டைலும் பாட முடியும்னு காட்டின மாதிரி, உங்களுக்கு ஒரு மெலடி கொடுத்து, உங்களால் அதுவும் பாட முடியும்னு காட்டறேன் பாருங்க’ன்னு தேவா சார் சொல்லிட்டே இருப்பார். அப்படியொரு வாய்ப்பு வந்தா, பார்ப்போம்.

Tuesday, June 4, 2013

நடிகை மணிமாலாவை காதலித்து மணம் முடித்தவர் வெ.ஆ.மூர்த்தி

பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார். கொமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி 1965 ஆம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் - நடிகை என்ற முறையில் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய நட்பு ஆனது. 5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு திருமணத்தில் முடிந்தது. 1970 ஆம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார் மூர்த்தி.

இதுபற்றி வெண்ணிற ஆடை முர்த்தி இப்படிச் சொன்னார்.
‘பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம், சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.
மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள் ‘இப்படி அம்பும் பண்பும் அமையப் பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே’ என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித ‘ஈகோ’வும் இருந்ததில்லை. அதனால் ‘நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்’ என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
மணிமாலா தரப்பிலும், என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.
திருமணத்துக்கு முன்னதாக எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள், நடிகர்கள் ஜெமினி கணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள் நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.
நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ள மாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.
திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு ‘மனோ’ என்று ஒரே மகன் என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக் குழந்தையும் உண்டு.
மனோவின் மனைவி சபிதா, கம்ப்பியூட்டர் என்ஜினியர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவள். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.
மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா - மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட ஒரு சின்ன தப்புகூட அவனைப் பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும். கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட உடனே போன் பண்ணி ‘இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்’ என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.
மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருடத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், ‘அப்பா அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா’. என்றான் எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது ‘அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்’ என்றேன். நான் இப்படிச் சொன்னபோது அவனும் கண் கலங்கிவிட்டான்.
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை டைரக்டர் கே. பாலசந்தர் ‘சிந்து பைரவி’ படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வாற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலச்சந்தரின் ‘சஹானா’ சீரியலிலும் நடிச்சாங்க இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க’
இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.
மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும் மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஓய். ஜி. மகேந்திரன், எஸ். எஸ். சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
வைஜயந்தி மாலா நடித்த ‘வாழ்க்கை’யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி. ஆர். ராமச்சந்திரனுடன் சேர்ந்து ‘எல்லைக்கோடு’ படத்தில் காமெடி செய்திருக்கிறார்.
நடிகவேள் எம். ஆர். ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று
ஜி>டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் ‘சித்ராலயா’ என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார்.
இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார் மூர்த்தி. 3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார் மூர்த்தி.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது :-
‘தமிழ் செழிப்பான மொழி ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும் ஏற்றி இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டுபுரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.
‘எப்படி பார்க்கிறது? பட்செட் சொல்லுங்க’ என்கிறார், புரோக்கர் ‘சின்ன வீடா’ இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர் அவர் ‘சின்னவீடு’ என்பதை தனதுபட்ஜெட் அடிப்படையில் சொன்னார் இதுவே ‘சின்ன வீடு’ என்று வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?
அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும் நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும் நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே’
இவ்வாறு கூறினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

நடிக்கும் ஆசையில் (தஞ்சா) ஊரில் இருந்து ரயில் ஏறிய விஜயகுமார்!

சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால் விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார். நடிக்கும் ஆசையில் ஊரில் இருந்து ரயில் ஏறிய விஜயகுமார், சென்னை வந்து பெட்டிக்கடை வைத்திருக்கிற அண்ணனை சந்தித்தார். அண்ணனுக்கு இவரைப் பார்த்ததும் அதிர்ச்சி.

இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது :-
‘எந்தவித தகவலும் இல்லாமல் தன்னந்தனியாய் தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்து அண்ணனை பார்த்ததும் அவருக்கு தூக்கிவாரிப் போட்டது ‘என்னப்பா திடீர்னு?’ என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.
அண்ணன் கேட்ட தோரணையிலேயே எனது சென்னை விஜயம் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்து போயிற்று. நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்ததாக கூறினால், மறுநிமிடமே ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவர் என்று தோன்றியது. இதனால் ஊரை சுற்றிப் பார்க்க வந்தேன் என்று பொய் சொல்லி சமாளித்து விட்டேன்.
ஆனாலும் அண்ணனிடம் நாலைந்து நாட்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. அண்ணன் கடையில் சுப்பாராவ் என்பவர் வேலை பார்த்தார். அந்த சின்னக் கடையில் ஒரே நேரத்தில் 2 பேருக்கு மேல் நிற்க முடியாது என்றாலும் தங்கும் ஆசையில் ‘பீடா’ தயாரிக்க கற்றுக்கொடுக்கும் படி கடைசியில் இருந்த சுப்பாராவிடம் கேட்டேன்.
அவர் கற்றுக் கொடுப்பதற்குள் அண்ணன் என்னைப் புரிந்து கொண்டு, புது டிரெஸ், ஷ¤ எல்லாம் வாங்கிக் கொடுத்து ஊருக்கு ரெயிலேற்றி விட்டுவிட்டார்.
ஒரு வாரம் கூட ஆகவில்லை போன வேகத்தில் திரும்பி வந்த என்னை அப்பா ஆச்சரியமாக பார்த்தார். அப்பா எனது சென்னைப் பயணம் உடனடியாக முடிந்து போனது பற்றி கேட்டபோது ‘மறுபடியும் சென்னைக்குப் போய் நடிக்கும் முயற்சியை தொடங்கப் போகிறேன்’ என்றேன்.
இப்போது அப்பா என்னிடம் ‘சென்னையில் உனக்குத் தெரிந்தது உன் அண்ணன் மட்டும்தானே இது மாதிரி ஏதாவது ஏடாகூடம் பண்ணி வைக்கக்கூடாது என்பதற்காகத்தானே உன்னை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டான்’ என்றார்.
இப்போது அப்பாவிடம் கொஞ்சம் தைரியமாக வாய் திறந்தேன் ‘சென்னையில் எனக்குத் தெரிந்த இன்னொருவர் இருக்கிறார் அவரது அறையில் தங்கிக்கொண்டு சினிமாவுக்கும் முயற்சிப்பேன்’ என்றேன்.
என் பிடிவாதமும், அதில் நிலைத்து நின்ற உறுதியும் அப்பாவுக்கு பிடித்திருக்க வேண்டும் என் விருப்பத்துக்கு பச்சைக் கொடி காட்டினார். ‘சரி சரி மாதம் உனக்கு நான் எவ்வளவு பணம் அனுப்பி வைக்க வேண்டும்?’ என்று கேட்டார்.
‘மாதம் மூன்னூறு ரூபாய் அனுப்பினால் போதும்’ என்றேன். மூன்னூறு ரூபாய் என்பது அப்போது கொஞ்சம் பெரிய தொகைதான் ஏனென்றால் தஞ்சையில் இருந்து சென்னை வர ரயில் கட்டணமே 7 ரூபாய்தான்!
நான் தெளிவாக சொல்லி விட்டபிறகு அப்பா எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ‘போய் முயற்சி பண்ணு உன் ஆசை அதுதான் என்றால், அதிலேயே தீவிரமாக முயற்சி செய்’ என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார், அப்பா’ இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
இப்படியாக இரண்டாவது முறையும் சென்னை வந்த விஜயகுமாருக்கு, சுப்பாராவ் தங்கியிருந்த மைலாப்பூரு அப்பு முதலி தெருவில் இருந்தது அறை அடைக்கலம் கொடுத்தது. தம்பி வந்தது அண்ணனுக்கும் தெரிந்து போயிற்று. இதற்குள் தம்பியின் நோக்கம் அப்பாவால் ‘தபால்’ மூலம் அண்ணனுக்கு விளக்கப்பட்டுவிட, அண்ணன் தரப்பிலும் எதிர்ப்பில்லை.
சுப்பாராவின் முயற்சியில் விஜயகுமாருக்கு முதலில் அமைந்தது நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புதான். அது பற்றி விஜயகுமார் விவரிக்கிறார்.
‘அப்போது ஆர். எஸ். மனோகர் நாடகம் பிரபலம். அவரிடம் நடித்துக் கொண்டிருந்த சரோஜா பிரிந்துபோய் ‘சரோஜ் நாடக தியேட்டர்’ ஆர்பித்தார். இந்த கம்பெனியின் மனேஜர் மகாதேவ அய்யரிடம் சுப்பாராவ் என்னை சிபார்சு செய்தார். என்னிடம் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்ட மகாதேவ் அய்யர் அப்போது தயாராக இருந்த ‘ராமபக்தி’ நாடகத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு தந்தார்.
அதுவும் முதல் நாடகத்திலேயே எனக்கு இரட்டை வேடம் நாடகத்தின் தொடக்கத்தில் பிள்ளையார் வேடம், முடியும் போது மகாவிஷ்ணு வேடம். நாடக ஒத்திகைகள் மளமளவென நடந்தன. இதற்குள் சுப்பாராவுடன் நான் தங்கியிருந்த மேன்சனில் ஒன்றிரெண்டு பேர் நண்பர்கள் ஆனார்கள். நான் நடிக்கப் போகும் விஷயத்தை அவர்களிடம் சொல்லியிருந்தேன்.
நாடகத்தின் முதல் நாள் காட்சி தொடங்கிவிருக்கிறது. என்னைத் தவிர மற்ற எல்லாருக்கும் ‘மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஒரு கட்டம் வரை பொறுத்துப் பார்த்த நான், ‘எனக்கு மேக்கப் போடவில்லையே’ என்று கேட்டுவிட்டேன். கேட்டதுதான் தாமதம், விநாயகர் கவசத்தை என் தலையில் மாட்டி நாடக அரங்கில் உட்கார வைத்து விட்டார்கள். கையில் ஒரு எழுத்தாணியும் கொடுத்திருந்தார்கள்.
நாடக கட்சிக்கான திரை விலகியதும், விநாயகரான நான் எழுத்தாணியால் எழுதுகிற காட்சிதான் ரசிகர்களுக்கு தெரியும்.
நாடக இடைவேளை வந்தபோது மேன்ஷன் நண்பர்கள் என்னை வந்து பார்த்தார்கள். அவர்களிடம், >(ளிlழி கவசம் போட்டபடி விநாயகராக வந்தது நான்தான் என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை அந்த நாடகத்தில் கடைசியில் நான் ஏற்றிருந்த ‘மகா விஷ்ணு’ வேடம் தான் அவர்களை நம்ப வைத்தது.’
இவ்வாறு கூறினார் விஜயகுமார்.
18 வயதில் நாடகம் மூலம் நடிகராக வெளிப்பட்ட நடிகர் விஜயகுமாருக்கு சினிமா வாய்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர் ஒரு ஜோதிடர். அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.
‘நான் நாடகங்களில் நடித்து வந்த நேரத்தில் கும்பகோணம் வையாபுரி ஜோசியர் எனக்கு அறிமுகமானார். இவர் டைரக்டர்கள் கே. எஸ். கோபலகிருஷ்ணன், மல்லியம் ராஜ்கோபால் போன்றவர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தார்.
இவரது நட்பு எனக்கு கிடைத்தபோது அவருடன் தொடர்பு வைத்திருந்த எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் என்னையும் அழைத்துப் போனார். அப்படி அழைத்துப்போன போது டைரக்டர் ராமண்ணா எனக்கு அறிமுகமானார் என் நடிப்பு ஆர்வம் ஜோதிடர் மூலமாக அவருக்கு சொல்லப்பட்டதும் அவர், ‘இப்போது சிவாஜி பத்மினி நடித்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் ‘ஸ்ரீவள்ளி’ படத்தில் சின்ன வயது முருகனாக நடிக்க ஒரு இளைஞர் தேவைதான்’ என்றவர் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார் இந்த வகையில் படத்தின் பெரிய முருகன் சிவாஜி சின்ன முருகன் நான். 1961 ல் வெளியான இந்தப் படம்தான் தமிழில் தயாரான முதல் கலர் படம்.
இந்தப் படம் வந்தபோது, ஒரே நாளில் எங்கள் சொந்த ஊரான ‘நாட்டுச்சாலை’ முழுக்க பிரபலமாகி விட்டேன் என்றார்.
விஜயகுமார் படத்தில் நடித்துவிட்ட போதிலும், தொடர்ந்து வாய்ப்புக்கள் வரவில்லை. அதற்குக் காரணம் அவரது 18 வயதுப் பருவம்தான் சிறுவனாகவும் இல்லாமல் இளைஞனாகவும் இல்லாத அந்த இரண்டும் கெட்டான் வயதில் இருந்து விஜயகுமாரிடம் ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள் கதாநாயகன் வாய்ப்பை நானே தருகிறேன்’ என்று டைரக்டர் ராமண்ணா கூறினார். அதன்படி விஜயகுமார் பொறுமையுடன் காத்திருந்தார். ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டோ அல்ல, ஐந்து ஆண்டுகள்!