ஆதிஸ்ரீ ஐயப்ப ஷேத்திரத்தின் புனித சபரிமலை யாத்திரை ஆதிஸ்ரீ ஐயப்ப ஷேத்திரத்தின் அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கத்தின் சபரிமலை தீர்த்த யாத்திரை குழுவினர் வருடாந்தம் நடத்தும் புனித சபரிமலை யாத்திரை இம்முறை 51வது ஆண்டாகவும் நடைபெறவுள்ளது. புனித சபரிமலை யாத்திரைக்கான விரதமாலை அணிந்து கொள்ளும் நிகழ்வு கார்த்திகை மாதம் முதலாம் நாளாகிய எதிர்வரும் 17ஆம் திகதி காலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்று கணபதி ஓமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகி 02.01.2027 அன்று மாலை கருப்பண்ணசுவாமி பூஜையுடன் நிறைவு பெறவுள்ளது. பொன். ரவீந்திரகுமாரன், இரா.செந்தமிழ்ச்செல்வன், ஆறுமுகம் சந்திரதாஸ் தலைமையில் பூஜைகள் அனைத்தும் நடைபெறும். இம்முறை சபரிமலை யாத்திரையாக சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன், திருவெண்காடு, கஞ்சனூர், திருக்கடையூர், திருமுல்லைவாயில், உப்பிலியப்பன், திருநாகேஸ்வரம், கும்பகோணம், திருவிடை மருதூர், சூரியனார் கோவில், திருக்கருகாவூர், திங்களூர், உட்பட பல கோயில்களை தரிசிக்கும் வாயப்பு கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. |
No comments:
Post a Comment