Tuesday, December 2, 2025

கொழும்பு தட்டாரத்தெரு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம்

 கொழும்பு தட்டாரத்தெரு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம்

நீதியும் நியாயமும தர்மமும் நிலைத்து நிற்கக்கூடிய தளம் திருத்தலம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருத்தலத்திலே எழுந்தருளி அல்லது வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் உரிய குல தெய்வமாக விளங்கக் கூடியவள் வீரத்திற்கு அதிபதியான ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆவார்.

திருமூலராய் ‘சிவபூமி’ என போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே, நீதியும் நேர்மையும் உண்மையும் சத்தியமும் வெற்றிபெற்று நிலைத்து நிற்க வேண்டும் என்று வாய்மையால் வாதாடும் வக்கீல்களும் நீதி தவறாது தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் காலைப் பொழுதானால் சோம்பல் இன்றி வீரத்தின் அடையாளமாய் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்கின்ற நீதிமன்றங்களும் நிறைந்து விளங்கும் புதுக்கடை என அழைக்கப்படும் ஹல்ஸ்டொப் சில்வர் சிமித் ஒழுங்கையில் அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்.

இலங்கையிலே துர்க்கை அம்மனை மூல மூர்த்தியாக கொண்டுள்ள தலங்கள் இரண்டே இரண்டு தான் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ளது. அடுத்தது கொழும்பு தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இத்திருத்தலமாகும். இத்தலம் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது.

இற்றைக்கு 102 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1910 ஆம் ஆண்டு வைகாசியான மே மாதம் 27 ஆம் திகதி இத்திருத்தலத்தை அமைப்பதற்கான அடித்தளமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொண்டதன் விளைவாக இவ்வாலயம் முளையிடப்பட்டது. அன்று முதல் ஸ்ரீ துர்க்கை அம்பாளின் அருள் மகிமை இப்பகுதி எங்கும் வியாபித்து தூபமிடத் தொடங்கியது. ‘அவளின்றி அணுவும் அசையாது’ என்ற அடை மொழிக்கு அமைய மடாலயமாக இருந்தது ஆலயமானது. குடிலாக இருந்தது கோபுரமானது.

இந்த அரும்பெரும் கைங்கரியம் நிறைவேற முத்தாக வித்தாகியவர் அ. பெருமாள் செட்டியார். இவர் தான் இந்த ஆலயத்தை முதன் முதலில் அமைத்தவர்.

இவர் அம்பாளின் திருவடியை எய்திய பின் அ. சுப்பையா செட்டியார், ஏ.பி. எஸ். ஆறுமுகம் செட்டியார், ஏ. பி. எஸ். அருணாசலம் செட்டியார் ஆகியோருக்கு இவ்வாலயத்தின் பரிபாலன அறப்பணிகளை மேற்கொள்ள அம்பாளின் அருட்கடாட்சம் கிடைத்தது. இவர்களுக்குப் பின் ஏ. ரத்னவேல் செட்டியாருக்கு இத்திருத்தலத்தை பரிபாலிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் இவ்வாலயத்தின் அருமை பெருமை இப்பகுதி எங்கும் பரவத் தொடங்கியது. இதுவரை காலமும் காலியாக இருந்த கஜானாவின் மீது ஸ்ரீ லட்சுமி அம்பாளின் அருட் பார்வை படத்தொடங்கியது. இவரைத் தொடர்ந்து பி. கலியப் பெருமாள், க. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இவ்வாலய திருப்பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

இவர்களது காலத்தில் தான் இத்திருத்தலத்தில் கர்ப்பக் கிரகம், மகாமண்டபம், கோபுரம் ஆகியன அமைக்கப்பட்டன. ஆகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்ட இத்திருத்தலத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏற்ப கும்பாபிஷேகம் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது 1982 ஆண்டிலாகும்.

1982-03-02 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்குப் பின் தான் ஆலய தலைவராக லயன் முத்துக்கிருஷ்ண ராஜா கேசவராஜா ஜே. வி. யும் உப தலைவராக பீ. ராஜேந்திரனும் செயலாளராக எஸ். ஸ்ரீ காந்தும் உப தலைவராக ஆர். பாலசுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டனர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் 1982 ஆம் ஆண்டுக்குப் பின் நீண்டகாலமாக ஆகம விதிக்கு ஏற்ப இங்கு மகா கும்பாபிஷேகம் நடததப்படவில்லை. அதன் பின் ஆலய அறங்காவலர் சபைத் தலைவராக லயன் எம். கேசவராஜா நீண்ட காலம் பணியாற்றி வந்தார். அவரது பார்வையில் புதிய நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டது.

அப்போது தலைவராக லயன் எம். கேசவராஜாவும் செயலாளராக கே. ஈஸ்வரலிங்கமும், பொருளாளராக பீ. முருகேசுவும், உப தலைவர்களாக டி. சீ. மூர்த்தி, பி ராஜேந்திரன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக எஸ். ஸ்ரீகாந்த், ஆர். சுப்பிரமணியம், கே. பாலசுப்பிரமணியம், ஆர். எஸ். எஸ். முரளி, டீ. சுவேந்திரராஜா, கே. உதயச்சந்திரன் ஆகியோரும் கணக்காளராக என்.

முருகதாஸ¤ம் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குறையை போக்கும் வண்ணம் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயத் தலைவர் லயன் எம். கேசவராஜாவினால் பிரபல தொழிலதிபர் எஸ். சந்திரசேகர் தலைவராகவும் வர்த்தகரான டி. சி. மூர்த்தி பொருளாளராகவும் கொண்டு 1999 ஆம் ஆண்டு திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு 1999 வைகாசியில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின் மேற்கொள்ளப்பட்ட திருப்பணியின்போது அஷ்ட லஷ்மிகள், நவதுர்க்கைகள், லக்ஷ்மி நாராயணன், உமையொருபாகன், வைரவப் பெருமான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பண்டிகைகள் அமைக்கப்பட்டு திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதற்கமைய இவ்வாலயத்தில் கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, தனலக்ஷ்மி, அருள் லக்ஷ்மி ஆகிய அஷ்ட லக்ஷ்மிகளினதும் வன துர்க்கை, ஆலனி துர்க்கை, ஜாத வேதோ துர்க்கை, சாந்தி, துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வலத் துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆஸ¤ர துர்க்கை என நவ துர்க்கைகளினதும் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கதிரவனின் ஒளிக் கதிர்கள் கோபுர கலசத்தின் ஊடாகக் கர்ப்பக் கிரகத்திற்கு ஊடுருவிப் பாயும் வண்ணம் கோபுரத்தை அண்டியுள்ள முகட்டுப் பகுதி திறந்தவெளியாக்கப்பட்டது. அடியார்களின் உள்ளத்து உணர்வுகளை அம்பாள் ஈர்த்து உணர்ந்து கொள்ள இலகுவாகும் வண்ணமும் அம்பாளின் அருளை அடியார்கள் உவந்து பெற்றுக்கொள்ள இலகுவாகவும் ஆலய வாயிலிருந்து கர்ப்பக்கிரகம் வரை குளுகுளுவென குளுமையூட்டக் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டன.

ஆலயம் முழுவதும் தெய்வீகக் கலை வண்ணம் மிளிரும் வகையில் ஆலய முகட்டில் தாமரை மலர்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருப்பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு 2000ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளதால் கடந்த 2011.11.14ஆம் திகதி பாலஸ்தானம் செய்யப்பட்டு தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

2012.04.06ஆம் திகதி இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கே. ஈஸ்வரலிங்கம்

முன்னாள் செயலாளர்

அறநெறி அறிவு நொடி

 

207685. திருவுந்தியாரை அருளிச்செய்தவர் யார்?

உய்யவந்ததேவ நாயனார்.

207686. திருக்களிற்றுப்படியாரை அருளிச்செய்தவர் யார்?

திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்.

207687. சிவஞானபோதம் அருளிச் செய்தவர் யார்?

மெய்கண்டதேவர்.

207688. சிவஞானசித்தியார், இருபாஇருபஃது ஆகிய இரண்டையும் அருளிச் செய்தவர் யார்?

அருணந்தி சிவாச்சாரியார்.

207689. உண்மை விளக்கம் அருளிச் செய்தவர் யார்?

மனவாசகங்கடந்தார்.

207690. ஏனைய சிவப்பிரகாசம் முதல் சங்கற்பநிராகரணம் வரையுள்ள எட்டு நூல்களையும் செய்தருளியவர் யார்?

உமாபதி சிவாச்சாரியார்.

207691. உமாபதி சிவாச்சாரியார் செய்தருளிய நூல்கள் எட்டும் எவ்வாறு பெயர் பெறும்?

சித்தாந்த அட்டகம் எனப் பெயர் பெறும்.

207692. இந்த எட்டும் ஏனைய ஆறும் ஆகிய பதினான்கு சைவசித்தாந்த சாத்திர நூல்களும் எவ்வாறு பெயர் பெறும்?

மெய்கண்ட சாத்திரங்கள் எனப் பெயர் பெறும்.

207693. மெய்கண்ட சாத்திரங்கள் எதனை விளக்குகின்றன? சைவசித்தாந்த உண்மைகளை விளக்குகின்றன.

207694. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மைகள் யாவை?

பதி, பசு, பாசம்.

கொழும்பு, தட்டாரத்தெரு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய ரதபவனி

 கொழும்பு, புதுக்கடை, சில்வர் சிமித்லேன் (தட்டாரத்தெரு) அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 09-12-2025 ஆம் திகதி வரை தினமும் காலையும் மாலையும் விஷேச அபிஷேகமும் ஹோமத்துடன் இலட்சார்ச்சனையும் நடைபெறும். எதிர்வரும் 10-12-2025 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நவோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று காலை 10.00 மணியளவில் இரதபவனி ஆரம்பமாகும்.

ஆலயத்தில் இருந்து ரதம் அப்துல் ஹமீட் வீதி, குவாரிரோட், பழைய சோனக தெரு, ஸ்ரீ சங்கராராஜ மாவத்த, பண்டாரநாயக்க மாவத்த வழியாக ஆலயத்தை வந்தடையும். அன்று நண்பகல் 13.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இவ்வாரலயத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பால்குட பவனி நடைபெறும். இந்த பால்குட பவனி, அன்று காலை 8.30 மணிக்கு தட்டாரத்தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடையும். அத்தோடு தீர்த்தமும், கொடி இறக்குமும் நடைபெறும்.

12-12-2025 வெள்ளிக்கிழமை மாலை திருவூஞ்சலும் 16-12-2025 செவ்வாய்க்கிழமை வைரவர் மடையும் இடம்பெற்று திருவிழா நிறைவுபெறவுள்ளது.


 


 



 


 


 


 


 


 


 


 


 


 


 

(தட்டாரத்தெரு) அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்காபிஷேகம்

 

கொழும்பு, புதுக்கடை, சில்வர் சிமித்லேன் (தட்டாரத்தெரு) அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் 09-12-2025 ஆம் திகதி வரை தினமும் காலையும் மாலையும் விஷேச அபிஷேகமும் ஹோமத்துடன் இலட்சார்ச்சனையும் நடைபெறும். எதிர்வரும் 10-12-2025 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நவோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று காலை 10.00 மணியளவில் இரதபவனி ஆரம்பமாகும்.

ஆலயத்தில் இருந்து ரதம் அப்துல் ஹமீட் வீதி, குவாரிரோட், பழைய சோனக தெரு, ஸ்ரீ சங்கராராஜ மாவத்த, பண்டாரநாயக்க மாவத்த வழியாக ஆலயத்தை வந்தடையும். அன்று நண்பகல் 13.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இவ்வாரலயத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பால்குட பவனி நடைபெறும். இந்த பால்குட பவனி, அன்று காலை 8.30 மணிக்கு தட்டாரத்தெரு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடையும். அத்தோடு தீர்த்தமும், கொடி இறக்குமும் நடைபெறும்.

12-12-2025 வெள்ளிக்கிழமை மாலை திருவூஞ்சலும் 16-12-2025 செவ்வாய்க்கிழமை வைரவர் மடையும் இடம்பெற்று திருவிழா நிறைவுபெறவுள்ளது.


 

Wednesday, October 29, 2025

இலங்கை மருத்துவ சங்கத்தின் வரலாறு

 இலங்கை மருத்துவ சங்கத்தின் வரலாறு

  இலங்கை மருத்துவ சங்கத்தின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்டது.  நாட்டில் மருத்துவ பயிற்சியாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், மருத்துவத் தொழிலின் நலன்களையும் கௌரவத்தையும் பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஊக்குவிக்கவும் அனைத்து மருத்துவர்களையும் ஒரு பொதுவான தளத்திற்குக் கொண்டுவர  ஒரு சங்கத்தின் வலுவான தேவையை மருத்துவர்கள் உணர்ந்தார்கள். நாடு   பிரிட்டிஷ் காலனியாக இருந்த   நேரத்தில், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மருத்துவ சங்க  காலனிகளில் மருத்துவத் தொழிலின் மீது ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டை வலியுறுத்தி இந்த நாடுகளில் கிளைகளை உருவாக்க அனுமதித்தது. 1887 ஆம் ஆண்டு பெப்ரவரி 26,ஆம் திகதி கொழும்பில் உள்ள காலனித்துவ மருத்துவ நூலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது, இது பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் இலங்கை கிளையை நிறுவுவதற்கான கூட்டமாகும்.  டாக்டர் டபிள்யூ.ஆர். கின்சி, டாக்டர் ஜே.எல். வான்டர்ஸ்ட்ராட்டன், டாக்டர் ஜே.டி. மெக்டொனால்ட், டாக்டர் டபிள்யூ.ஜி. வான் டார்ட், டாக்டர் டபிள்யூ.ஜி. ராக்வுட் மற்றும் டாக்டர் ஈ.என். ஸ்கோக்மேன் போன்ற அப்போதைய முன்னணி மருத்துவ பயிற்சியாளர்கள் உட்பட பதினைந்து மருத்துவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கிளை 1887 டிசம்பர் 17 ஆம் திகதி கொழும்பு, கண்டி, காலி மற்றும் களுத்துறை ஆகிய இடங்களிலிருந்து 19 உறுப்பினர்களின் பங்கேற்புடன் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரியில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் டாக்டர் டபிள்யூ. ஆர். கின்சி ஏகமனதாக  தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், அவர் வெளிநாட்டு விடுப்பில் செல்லவிருந்ததால் அந்தப் பதவியை மறுத்து, அந்தப் பதவிக்கு டாக்டர் அந்தோனிஸை முன்மொழிந்தார். எனவே, டாக்டர் அந்தோனிஸ் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் சிலோன் கிளையின் முதலாவது  தலைவரானார், டாக்டர் ஹென்றி கீகல் முதலாவது செயலாளரானார்.   

 இலங்கை கிளை 65 உறுப்பினர்களுடன் தொடங்கியது, 1898 ஆம் ஆண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆகியது. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. இது பிரிட்டிஷ் காலனிகளில் மிகப்பெரிய கிளைகளில் ஒன்றாக விளங்கியது.

 சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து, சங்கத்தின் பெயர் 1951 இல் இலங்கை மருத்துவ சங்கமாக மாற்றப்பட்டது. 1957 இல் இந்த சங்கம் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்துடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. புதிய ஜனநாயக சோசலிச குடியரசு அறிவிக்கப்பட்டதன் மூலம் தற்போதைய பெயரான "இலங்கை மருத்துவ சங்கம்" என்றபெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1937 இல் அதன் பொன் விழாவைக் கொண்டாடியது, சர் நிக்கோலஸ் அட்டிகல்லே தலைவராகவும் டாக்டர் ஈ.எம். விஜேராம  செயலாளராகவும் இருந்தார்.

 சிலோன் மருத்துவ இதழ்

 சிலோன் மருத்துவ இதழ் 1887 ஆம் ஆண்டு டாக்டர் ஹென்றி கீகலனை ஆசிரியராக்க்கொண்டு தொடங்கப்பட்டது இது காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டது. இலங்கையில் இந்த மருத்துவ பருவ இத​ழை முதலில் வெளியிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றன. அதன்பின் அதில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் முக்கியத்துவம் காரணமாக இது மிகுந்த பாராட்டுக்களையும் பாராட்டையும் பெற்றது. இருப்பினும், இது 1893 இல் வெளியீட்டை நிறுத்தியது, மேலும் 1904 ஆம் ஆண்டில் டாக்டர் ஆல்பர்ட் சால்மர்ஸால் "பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் சிலோன் கிளையின் இதழ்" என்ற பெயரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு அது தடையின்றி வெளியிடப்பட்டு 1952 இல் "சிலோன் மருத்துவ இதழ்" என்ற முந்தைய பெயரை மீண்டும் பெற்றது. தற்போது, ​​இது இலங்கையில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மருத்துவ இதழாகும், இது அமெரிக்காவில் இன்டெக்ஸ் மெடிகஸால் குறியிடப்படுகிறது.

 விஜேராம இல்லம்

தொடக்கத்திலிருந்து இந்த சங்கம் 73 ஆண்டுகள் சிலோன் காலனித்துவ நூலகத்திலும், பின்னர் நான்கு ஆண்டுகள் கொழும்பு பொது மருத்துவமனையின் ஆலோசகர்கள் ஓய்வறையிலும் இயங்கியது. தற்போதைய SLMA அமைந்துள்ள இடமான விஜேராம இல்லம், டாக்டர் ஈ.எம். விஜேராமாவின் இல்லமாகும், மேலும் இது 1964 ஆம் ஆண்டு அவரால் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த ஆலோசக  மருத்துவராக இருந்தார், அவர் ஒரு விதிவிலக்கான மருத்துவர், ஒரு அறிவார்ந்த வரலாற்றாசிரியர் மற்றும் ஒரு திறமையான ஆசிரியர் என தொழிலுக்கு ஒப்பற்ற பங்களிப்பை அளித்தார், அவர் மெக்கார்த்தி வீதியை அவரது நினைவாக "விஜேராம மாவத்தை" என்று  மாற்றினார்.

   மருத்துவ சமூகத்தை மருத்துவ தொழில்முறை மற்றும் நெறிமுறை நடத்தையின் மிக உயர்ந்த தரத்தை அடைய வழிநடத்துவதே இலங்கை மருத்துவ சங்கத்தின் தொலைநோக்கும், நோக்கமும், குறிக்கோளாகவும் இருந்தது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் சுகாதாரக் கொள்கை குறித்த ஆலோசனை அமைப்பாகவும்  இருக்க வேண்டும் என்தே இதன் குறிக்கோளாக இருக்கிறது.

 இதன் பொதுவான  நோக்கங்கள்

அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அனைத்து வகை மருத்துவர்களுக்கும் ஒரு உச்ச தொழில்வாண்மை அமைத்துக் கொடுப்பதும் இதனை அறிவியல் அமைப்பாக திறனை மேம்படுத்துதும் இதன் பொதுவான நோக்கமாகும்.

 இலங்கை மக்களுக்கு விரைவான விரிவான சிகிச்சைகளை வழங்கி குணப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.  

மருத்துவர்களிடையே தொழில்முறை, நல்ல மருத்துவ நடைமுறை மற்றும் நெறிமுறை நடத்தையை ஊக்குவிக்கவும்.

 மருத்துவ மற்றும் தொடர்புடைய சுகாதார நிபுணர்களிடையே மருத்துவ அறிவியலில் அதிநவீன அறிவு, மருத்துவ நடைமுறை, தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் கருத்துக்களைப் பரப்புதல்.

மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார நிபுணர்களின் தொடர்ச்சியான தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல்.

நெறிமுறை மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவித்தல்.

சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல்.

மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார நிபுணர்களிடையே  நெருக்கமான தொழில்முறை மற்றும் அறிவியல் தொடர்புகளை மேம்படுத்துதல்.

   இதன் முக்கிய மதிப்புகள்

 பொறுப்புடைமை - ஒரு தொழில்முறை அமைப்பாக அதன் பங்கில் பொறுப்பாக இருத்தல்

 பரிந்துரைத்தல் - சுகாதாரப் பராமரிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய மருத்துவ சமூகத்திற்குள் ஒரு குரலாக இருத்தல்

ஒத்துழைப்பு - சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த பிற நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுதல்

பன்முகத்தன்மை - விரும்பிய இலக்குகளை அடைய பல்வேறு நிபுணர்கள், தனிநபர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவன நிறுவனங்களுடன் தீவிரமாக ஈடுபடுதல்

நேர்மை - அதன் அனைத்து தொடர்புகள் மற்றும் செயல்பாடுகளிலும் மிக உயர்ந்த நெறிமுறை தரங்களை கடைபிடித்தல்

 தலைமைத்துவம் - தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதார சேவையை அடைய மருத்துவத் தொழில் மற்றும் சமூகத்திற்கு தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குதல்

 சமூகப் பொறுப்பு - சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய தொழில்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே மற்றும் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல்.